CAA Crimes Against Women Uttar Pradesh

“தீயில் கிடந்த விறகுகளை கொண்டும் தாக்கினர், ஆபாசமாகவும் சீண்டினார்கள்” – குமுறும் உபி பெண்கள்!!

டில்லி ஷஹீன் பாகில் பெண்கள் தலைமையில் நடந்து வரும் தொடர் போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இவர்களை பின்பற்றி போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இடங்களில் ஒன்றுதான் உபி யில் உள்ள எட்டாவா.

போலீசாரா அல்லது ?

போலீசார் எங்களை தீயில் எரிந்து கொண்டிருந்த விறகுகளை கொண்டு தாக்கினர். சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் இது தான் உண்மை. விறகின் முன் பக்கத்தில் தீ இல்லை என்றாலும் அது சூடாகவே இருந்தது. இதை கொண்டு பெண்களின் தலையில் தாக்கினர்.

எனது உறவு முறை சகோதரி ஒருவர் விறகால் தலையில் தாக்கப்பட்டார். என் சகோதரி தலையிலும் முதுகிலும், லத்தியால் தாக்கப்பட்டார். நானும் ஒரு லத்தியால் முதுகில் தாக்கப்பட்டேன்.

https://twitter.com/Dilsedesh/status/1219891958358761472

என்கிறார் 25 வயதான கல்லூரி மாணவி ஷும்பல். பயத்தால் இவரது முழு பெயரை அவர் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் செய்ய வேண்டிய வேலையை இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு ஊடகம் HuffPost பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது. இதுவே இந்தியாவின் ஊடகத்தின் லச்சனத்தை நமக்கு காட்டுகின்றது. கீழே தரப்பட்டுள்ளது ஷும்பல் மற்றும் 23 வயதான அவரது சகோதரி மன்திஷா இருவரும் கூறிய செய்திகளாகும்.

நாங்கள் ஊடகம் நடத்துவது பணம் சம்பாரிக்க இல்லை. செய்திகளை கொண்டுபோய் சேர்ப்பிக்கவே. எங்கள் இணையதள செலவுகள் மற்றுமுள்ள அநேக செலவுகளுக்கு உதவிடுங்கள். உங்கள் ஆதரவை கொண்டு மட்டுமே நாங்கள் செயல்பட இயலும். நன்றி

அமைதியாக பேசி போய்விட்டு, பின்னர் வந்து தடியடி:

எட்டாவாவில் உள்ள பக்ராஹா கோட்வாலியில் கடந்த 14ம் தேதி அன்று பெண்கள் சிஏஏ, என்ஆர்சி திட்டடங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் முகமாக ஒன்று கூடினர்.. சிறிது நேரத்தில் 1000 பெண்கள் அளவிற்கு கூடினர். உடனே மதியம் இரண்டு மணியளவில் போலீஸ் அதிகாரிகளும் களத்திற்கு வந்தனர். அவர்களைத் தொடர்ந்து வட்ட அலுவலர் வைபவ் பாண்டே மற்றும் ஜஸ்வந்த்நகரின் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்), ஜோத்ஸனா பந்தூ ஆகியோரும் வந்தனர்.

அவர்கள் எங்களுடன் பேசினார்கள், நாங்களும் அவர்களுடன் பேசினோம். எங்களால் எந்த வித பாதிப்பும் வராது, ஆம்பலுன்ஸ் வாகனமோ, அல்லது போக்குவரத்துக்கு பாதிப்போ என எந்த விதமான பாதிப்பும் நடக்காது அதற்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம் என்று கூறினோம். அவர்களும் அதை ஏற்று விட்டு சென்றனர்.

ஆனால் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த போலீசார் திடீரெனெ பெண்கள் என்றும் பாராமல் இழுத்து பிடித்து தள்ளிவிட்டு , தடியடி நடத்த ஆரம்பித்தனர். இம்முறை வந்த போலீசாரின் நாங்கள் யாருடன் பேசினோமோ அவர்கள் இல்லை. அவர்கள் எங்களை அடித்து விரட்ட செய்தனர், பலரை கைது செய்தனர்.

ஆபாசமாக சீண்டினர் :

அப்போது ஆண் பெண் என இரு பாலர் போலீசாரும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எங்கள் அங்க அவயங்களில் ஆபாசமான முறையில் தொட்டனர். என்னை இவ்வாறு மூன்று முறை செய்தார்கள் நான் அதை பலமாக எதிர்த்தபோது என்னை தாக்க முயன்றனர். போலீஸ் வாகனத்தில் பிடித்து என்னை தள்ளினார். அங்கு எனக்கு உதவியாக பல பெண்கள் கூடிய பிறகு தான் அவர்களின் அத்துமீறல்களை கைவிட்டனர்.

நாங்கள் இத்தனை நாட்களில் ஒருமுறை கூட எதற்கும் போராடியதில்லை. இவ்வாறு ஒன்று கூடியதில்லை ஆனால் இம்முறை தான் நாங்கள் போராட வந்தோம். ஆனால் போலீசார் எங்களை இப்படி நடத்துகின்றனர்.

போலீசாரின் கதை:

144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும், போராட்டக்காரர்கள் கல் வீசியதாலும் தான் நாங்கள் சிறிய அளவில் தடியடி நடத்தினோம் என்ற கதையை ஆதித்யநாத் கீழ் செயல்படும் போலீசார் கூறுகின்றனர். எனினும் இதே 144 தடை உத்தரவு அமலில் இருக்க பாஜக மட்டும் சிஏஏ வுக்கு ஆதரவாக பேரணி, போராட்டம் என நடத்துகின்றனர்.

https://twitter.com/IndianMuslimahs/status/1221103439444357120

ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள், ” துரோகிகளை பாகிஸ்தானுக்குஅனுப்புங்கள்” “பாகிஸ்தானுக்கு போ” என்ற வெறுப்பு கோஷங்களை எழுப்பியும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை, ஏன் இந்த பாரபட்சம், நாங்கள் மட்டும் ஏன் இப்படி நடத்தப்படுகிறோம் ?

தடியடி நடத்தியபடியே பெண்களை ‘ஓடு உன் வீட்டுக்கு’ என கூறியும் தீய சொற்களை கொண்டு இழிவுபடுத்தியும் எங்களை போலீசார் நடத்தினர் என்கின்றனர் அந்த சகோதரிகள்.

இதே போல லலக்னோவிலும் மக்களின் போர்வை, உணவு பொருட்கள் என 40,000 ருபாய் மதிப்புள்ள பொருட்களை உபி போலீசார் பறித்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

150 பெண்கள் உட்பட 900 பேர் மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கலகம் விளைவித்தல், அரசு ஆணைக்கு கீழ்ப்படியாதது, அதிகாரியைத் தாக்குவது போன்ற வழக்குகளை போராட்டக்கார பெண்கள் மீது போட்டுள்ளது எட்டவா போலீஸ்.