கடந்த ஜனவரி 20 திங்கள் நள்ளிரவில் பாஜக ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள பெங்களூரு தேவாலயம் ஒன்றிற்குள் புகுந்த பாசிச கும்பல் ஒன்று தேவாலயத்தை சூறையாடியுள்ளது.
அடையாளம் காணப்படாத சிலர் கெங்கேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செயின்ட் பிரான்சிஸ் ஆஃப் அசிசி தேவாலயத்தை சூறையாடியுள்ளனர். எனினும் இது பரவலாக மீடியாக்களில் வெளியாகாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
“இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. தேவாலயத்தின் புனிதத்தை அழிக்கும் நோக்கிலும், இயேசுவை இழிவுபடுத்தும் நோக்கி லும் இப்படி செய்யப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மனா வருத்தத்தை அளிக்கிறது.” என்று பெங்களூரின் பேராயர் பீட்டர் மச்சாடோ நடந்த சம்பவத்தை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
திருட அல்ல, தேவாலயத்தை நாசம் செய்யவே வந்துள்ளனர்:
குற்றவாளிகள் தேவாலயத்தில் இருந்து எந்த மதிப்புமிக்க பொருட்களையும் திருடவில்லை என்று தெரியவந்துள்ளது. தேவாலயத்தின் வாசஸ்தலம் மற்றும் வழிபாட்டுத் திருவினைக்குரிய இடத்தையும் அடித்து உடைக்கும் நோக்கத்துடன் மட்டுமே அவர்கள் வந்துள்ளனர். பரிசுத்த திருவிருந்தும் தேவாலயத்திற்குள் தூக்கி எறியப்பட்டிருந்தது. தேவாலயத்திற்குள் சிலைகள், மைக், மரத்தாலான பொருட்கள் என அனைத்தையும் சேதப்படுத்தியுள்ளது அந்த பாசிச கும்பல்.
போலிசார் வருகை:
தேவாலய அதிகாரிகள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.