அண்மையில் தனது வீட்டில் பணிபுரிந்த கட்டுமானத் தொழிலாளர்களில் சிலர் பங்களாதேஷிகளாக இருக்கலாம் என தான் சந்தேகித்ததாக பாரதீய ஜனதா தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா வியாழக்கிழமையன்று கருத்து தெரிவித்தார்.
பாஜக தலைவர் விஜயவர்ஜியாவின் அறிவு கூர்மை:
அவர்களின் “விசித்திரமான” உணவுப் பழக்கம் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என சந்தேகத்தைத் தூண்டியது என்று பாஜக பொதுச் செயலாளர் விஜயவர்ஜியா குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் கூறினார்.
சமீபத்தில் அவரது வீட்டின் புதிய அறையின் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட சில தொழிலாளர்களின் “உணவுப் பழக்கம்” “விசித்திரமாக” இருந்ததாகவும், அவர்கள் “போஹா” (தட்டையான அரிசி-அவல் பொரி) மட்டுமே சாப்பிட்டதை தான் கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எங்கள் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் : http://bit.ly/2nOa5Wp
விஜயவர்ஜியா மேற்கொண்ட விசாரணை:
கட்டிட பனியின் மேற்பார்வையாளர் மற்றும் ஒப்பந்தக்காரருடன் பேசிய பின்னர், இந்த தொழிலாளர்கள் பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என சந்தேகித்ததாக பாஜக தலைவர் விஜயவர்ஜியா கூறினார்.
பின்னர் நிருபர்கள் இது குறித்து அவரிடம் கேள்வி கேட்ட போது , “இந்த தொழிலாளர்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று நான் சந்தேகித்தேன். நான் சந்தேகப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் என் வீட்டில் வேலை செய்வதை நிறுத்தி கொண்டனர். இது குறித்து நான் இதுவரை எந்த ஒரு போலீஸ் புகாரும் செய்யவில்லை. மக்களை எச்சரிக்க மட்டுமே இந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டேன்” என்று அவர் கூறினார்.
விஜயவர்ஜியாவின் பேச்சை நீங்களே படிச்சு பாருங்க :
கருத்தரங்கில் பேசிய விஜயவர்ஜியா, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு பங்களாதேஷ் பயங்கரவாதி தன்னைக் கண்காணிப்பதாகவும் கூறினார்.
“நான் வெளியே செல்லும் போதெல்லாம், ஆறு ஆயுத பாதுகாப்பு வீரர்கள் என்னைப் பின்தொடர்கிறார்கள். இந்த நாட்டில் என்ன நடக்கிறது? வெளியில் உள்ளவர்கள் நுழைந்து இவ்வளவு பயங்கரவாதத்தை பரப்புவார்களா என்ன ? ”என்று கேள்வி எழுப்பினார் விஜயவர்ஜியா.
“வதந்திகளால் குழப்பம் அடைய வேண்டாம். சிஏஏ நாட்டின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் உண்மையான அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் அது மட்டுமின்றி நாட்டின் உள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஊடுருவும் நபர்களை அடையாளம் காணும், ” என்று அவர் மேலும் கூறினார்.
இவரின் இந்த அறிவார்ந்த பேச்சை கேட்டு மக்கள் திகைத்து போயினர். இதனால் இந்திய அளவில் #போஹா என்ற ஹாஷ்டாக் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆகி வருகிறது.