Political Figures

‘சிஏஏ சட்டம் மாற்றப்படவில்லை என்றால் கட்சியில் இருக்க மாட்டேன்’ ; நேதாஜி சிலையில் பாஜக கொடி வைக்கப்பட்டதற்கும் கண்டனம் – நேதாஜி பேரன் அறிவிப்பு !

நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் அவர்களின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதற்கு அவரது பேரன் சந்திர குமார் போஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசின் சிஏஏ சட்டம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய திரு.போஸ் சிஏஏ சட்டத்தை மாற்றவில்லை என்றால் பாஜக கட்சியில் நீதிபதி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் நேதாஜி சிலையின் புகைப்படம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தது.

பாஜக வை விட்டு விலக வேண்டி இருக்கும்:

“நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் நிச்சயமாக ஒரு அரசியல்வாதி தான், ஆனால் அவர் கட்சி அரசியல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். இன்று எந்த ஒரு அரசியல் கட்சியும் நேதாஜி சுபாஸ் சந்திர போஸை தங்கள் கட்சிக்காரரை போல் உரிமை கொண்டாடுவதை ஏற்கமுடியாது. எந்த கட்சியும் அதற்கு தகுதி வாய்ந்தது இல்லை. நேதாஜியின் சிலையில் கட்சி கொடியை தொங்கவிட்டு அவரை அந்த கட்சிக்காரரை போல சொந்தம் கொண்டாட முடியாது. இது மிகவும் முறையற்றது. இதை நான் கண்டிக்கிறேன். மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் உடனடியாக இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறன்” என்று நேதாஜியின் பேரன் கூறியுள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு கூட குடியுரிமை வழங்குமாறு சந்திரபோஸ் மத்திய அரசை வலியுறுத்தியிருந்தார்.

நான் சிஏஏ வை ஆதரிக்கிறன் ஆனா…

“நான் சில சிறிய மாற்றங்களுடன் CAA ஐ ஆதரிக்கிறேன். நமது அண்டை நாடுகளில் துன்புறுத்தப்டும் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியிருந்தார். ஆனால் காந்திஜி எந்த மதத்தையும் குறிப்பிடவில்லை. துன்புறுத்தப்பட்ட அனைவரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நாம் உண்மையில் காந்திஜியை பின்பற்றுபவர்களாக இருந்தால் அவர் சொன்ன அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும்.” என்றார் திரு. சந்திர குமார் போஸ்.

https://twitter.com/Termina54303923/status/1220376276055183360

அவர் மேலும் கூறுகையில், “துன்புறுத்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் இந்தியாவில் குடியுரிமை பெறப்படுவார்கள் என்று கூறி இந்திய அரசு CAA ஐ சரிசெய்து மாற்றியமைத்தால் முழு எதிர்க்கட்சி பிரச்சாரமும் சில நொடிகளில் சுக்குநூறாகி விடும்.” என்றார்.

நேதாஜியின் வழியில் தான் பயணிப்பேன்:

“சிஏஏ மதத்தை உள்ளடக்கியது அல்ல என்று உள்துறை அமைச்சர் எப்போதும் கூறி வருகிறார். எனவே அது எந்த மதத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றால், அது குறித்து நாம் வெளிப்படையாகவும், மிகவும் திட்டவட்டமாகவும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இது குறித்து நிறைய குழப்பங்கள் உள்ளன.

ஜனவரி 2016 இல், நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்தபோது நரேந்திர மோடி ஜி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஜி ஆகியோருடனான எனது கலந்துரையாடல்கள் என்னவென்றால், நேதாஜி சுபாஸ் போஸின் சித்தாந்தத்தின் அடிப்படையில் நான் அரசியல் செய்வேன். அவரது சித்தாந்தம் என்பது அனைத்து மக்களையும் உள்ளடக்கியது மற்றும் மதச்சார்பற்றது. நான் நேதாஜியின் திசைகளிலிருந்து விலக மாட்டேன். . இதை நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என்றல் நான் பாஜகவில் தொடர்வதை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்” என்று சந்திரபோஸ் கூறினார்.

மத்திய அரசு தெளிவு படுத்த வேண்டும்:

இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் எழுத்துப்பூர்வ தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் முன்பு கூறியிருந்தார்.

2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாடுகளில் மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்புவதற்காக இந்தியாவுக்குள் நுழைந்த இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு இந்திய குடியுரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது குடியுரிமை (திருத்த) சட்டம் என்கிறீர்கள்.

அப்படியானால் நீங்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்னர் இந்த நாட்டிற்குள் நுழைந்த முஸ்லிம்கள் விஷயத்தில் என்ன நடக்கும்? இது குறித்து குழப்பம் நீடிக்கிறது. அந்த குழப்பத்தை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று போஸ் கூறினார்.