Mamata Banerjee

‘இந்து மகாசபாவின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி’ – மம்தா பானர்ஜி புகழாரம் !

இன்று நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் 123 வது பிறந்த நாளை கொண்டாடும் நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு கீழ்கண்ட கருத்துக்களை தெரிவித்தார்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்து மகாசபாவின் “பிரிவினைவாத அரசியலை” எதிர்த்ததாகவும், மதச்சார்பற்ற மற்றும் ஒன்றுப்பட்ட இந்தியாவுக்காக போராடியதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

நேதாஜிக்கான சிறந்த அஞ்சலி:

நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிய திருமதி பானர்ஜி, சுபாஸ் சந்திரபோஸ் தனது போராட்டத்தின் மூலம் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற செய்தியை உலகிற்கு கூறியுள்ளார் என்றும், அவருக்கான சிறந்த அஞ்சலி என்பது நாம் அனைவரும் ஒன்றுபட்ட இந்தியாவுக்காக போராடுவதாகும் என கூறினார்.

இந்து மகாசபாவை எதிர்த்தார்:

“நேதாஜி இந்து மகாசபாவின் “பிரிவினைவாத அரசியலை” எதிர்த்தார். அவர் ஒரு மதச்சார்பற்ற இந்தியாவுக்காக போராடினார். ஆனால் இப்போதோ மதச்சார்பின்மையைப் பின்பற்றுபவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

மோடி அரசு மீது குற்றச்சாட்டு:

சுபாஸ் சந்திரபோஸ் காணாமல் போனதைச் சுற்றியுள்ள மர்மத்தை போக்குவதில் மத்திய அரசு “தீவிரம் காட்டுவதில்லை” என்று அவர் மோடி அரசின் மீது குற்றம் சாட்டினார்.

“அவர்கள் ஒரு சில கோப்புகளை மட்டுமே வகைப்படுத்தியுள்ளனர், உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தெரியாமல் உள்ளது எநமக்கு வெட்கக்கேடானது” என்று திருமதி பானர்ஜி கூறினார்.