Opinion Tamil Nadu

சென்னையில் தமிழரை காணோம் – பான்பராக் வாய்களால் நிறம்பிவிட்ட மாநகரம்!!

சென்னையில் எங்கு பார்த்தாலும் வடநாட்டுக்காரர்கள் தான் எனும் அளவிற்கு தற்போது நிலைமை உள்ளது . அவர்களுடைய அங்க அடையாளங்கள் வைத்து இவர்கள் தமிழர்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கடைத்தெருக்களில் காய்கறி மார்கெட்களில் பெண்களை இடித்து நகட்டிக்கொண்டு சாதாரணமாக போகிறார்கள். யாருக்கும் அடுத்த பெண்களை இடிக்கிறோம், நெருக்கமாக முட்டுவது போல நடக்கிறோம் என்கிற அக்கறையே இல்லை. காய்கறி மார்க்கெட்டில் ஒரு பெண் கூறுகிறார்….யப்பா…இதுங்க தொல்ல தாங்கல….ரேசன் கடை போனாலும் இதுங்கதான், குழாயடிக்கு போனாலும் இதுங்கதான் –என்ற சலிப்பு பேச்சினை கேட்க முடிந்தது.

Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.

நமது பெண்கள் அவர்களாக விலகி ஒதுங்கி செல்பவர்களாக இருக்கிறார்கள். மக்கள் அடர்த்தியாக நிற்கும் கடைகளில் இடிப்பது போல மிக பக்கத்தில் வந்து நின்றுகொள்பவர்கள் மீது குமட்டிக்கொண்டு துர்வாடை அடிக்கிறது (மன்னிக்க வேண்டும் இதை சொல்வதற்கு ஆனால் அது தான் நிஜம்) . ஏய், தள்ளி நில்லுப்பா என பெண்கள் கூறினால்…. அரே க்யாரே ஏ பக்வாஸ் என மொழி தெரியாது என்ற தைரியத்தில் அலட்டிக்கொள்கிறார்கள். நாம் கை நீட்டி எதுவும் வாங்கும் போது…போட்டிக்கு அவர்களும் கைகளை நீட்டி இடித்தபடியே அவர்களும் கேட்கிறார்கள்.

வேறு என்னென்ன மாதிரி அட்டூழியங்கள் செய்வார்களோ தெரியவில்லை. ஆயிரம் தான் சொல்லுங்க….நம்ம தென்னாட்டு மக்களுக்கு இருக்கும் டீசன்சி, குறிப்பாக தமிழர்களிடம் இருக்கும் கண்ணியம், பெண்கள் மீது மரியாதை, பிறருக்கு இடைஞ்சல் கொடுக்காமல் விலகிச்செல்லும் அந்த பக்குவம் , கடைகளில் பெண்களை கண்டால் விலகி நின்று அவர்கள் வாங்கிவிட்டு நகரட்டும் என நிற்கும் அந்த பொறுமை இதெல்லாம் இந்த பான்பராக்குகளுக்கு சுட்டுப்போட்டாலும் வராது போல.

அந்நியன் போல “இங்கே யாருக்கும் பொறுப்பில்லை, அக்கறையில்லை” என நாமும் புலம்பும் கட்டத்திற்கு வந்துவிட்டோம். இருபது வருடத்திற்கு முந்தைய சென்னையில் மார்வாடிகள் பெருகிதான் இருந்தார்கள், அவர்களிடம் இருந்த நம்மீதான மரியாதை இப்போது இல்லை. ஆனால் இவர்கள் வேறு ஆட்களாக இருக்கிறார்கள். பிகாரியா, உபியா, பெங்காலியா என கண்டுபிடிக்க இயலவில்லை.

மலையாளிகளையோ, தெலுங்கர்களையோ அல்லது கன்னடிகா மக்களையோ காணும்போதும் பேசும்போதும் நமக்கு ஏற்படாத ஒரு வேற்றுமை இவர்களிடத்தில் தோன்றுகிறது. காரணம்? பழக்கவழக்கம் சரியில்லை. நாகரீகம், கண்ணியம், பொறுமை, பண்பாடு இவற்றுக்கெல்லாம் அர்த்தமே தெரியாதவர்கள். தூரத்தில் வைத்து பார்த்தபோது அவ்வளவாக தெரியவில்லை… உள்ளூருக்குள் புகுந்த பிறகு எரிச்சலாகவே தோன்றுகிறது.

ஆக்கம்: நஸ்ரத்

This disclaimer informs readers that the views, thoughts, and opinions expressed in the text belong solely to the author, and not necessarily to the author’s employer, organization, committee or other group or individual.