சென்னையில் ஜனவரி 14 ஆம் தேதி தமிழ் பத்திரிகையான ‘துக்ளக்’ இன் 50 வது ஆண்டு-வாசகர்களின் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது உரையில், “1971 இல், சேலத்தில், பெரியார் ஒரு பேரணியை நடத்தினார், அதில் ஸ்ரீ பகவான் ராமச்சந்திரமூர்த்தி மற்றும் சீதா ஆகியோரை நிர்வாணமாகவும் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக சென்றார்- இதை எந்த செய்தி நிறுவனமும் அதை வெளியிடவில்லை. ” என்று கூறி இருந்தார்.
இதற்கு பல்வேரு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர். ராமர் மற்றும் சீதாவின் படங்கள் நிர்வாணமாக எடுத்து செல்லப்பட்டது என்று ரஜினி கூறியுள்ளது பொய் என திராவிடர் விடுதலை கழகம் கூறியுள்ளது. காவல் நிலையத்திலும் ரஜினிக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக நடிகர் ரஜினி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமூக சீர்திருத்தவாதி ஈ.வி ராமசாமி ‘பெரியார்’ குறித்து நடிகர் ரஜினிகாந் தெரிவித்த தவறான கருத்தை கண்டிக்கும் விதமாக நேற்று (20-1-20) மதுரையில் ஆதித் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த அமைப்பை சேர்ந்த 5 நபர்கள் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தனர். இதனை தொடர்ந்து அந்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்