Kerala Muslims

பள்ளிவாசலில் நடைபெற்ற இந்து திருமணம், நகை பணம் வழங்கியும் உதவிய ஜமாத்தார் !

பள்ளிவாசல் ஜமாத்தார் உதவி:

நேற்று கேரளாவின் ஆலப்புழா அருகே உள்ள செருவள்ளி முஸ்லிம் ஜமாஅத் பள்ளிவாசல் வளாகத்தில் ஒரு இந்து தம்பதியினரின் திருமணம் நடைபெற்றது. கணவரின் மரணத்தைத் தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த மணமகளின் தாய் பிந்து, உதவிக்காக மசூதி குழுவை அணுகியதை அடுத்து அவரின் கோரிக்கையை ஜமாத்தார் உடனடியாக ஒப்புக்கொண்டனர். மணமகள் அஞ்சு மற்றும் மணமகன் சரத் ஆகியோர் மசூதி வளாகத்தில் ஒரு பூசாரி முன்னிலையில் மாலைகளை பரிமாறிக்கொண்டு இந்து முறைபடி சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொண்டனர்.

பள்ளிவாசல் வளாகத்தில் சைவ சத்யா விருந்து :

சுமார் 1,000 பேருக்கு சைவ உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக செருவலி ஜமாஅத் செயலாளர் நுஜுமுதீன் தெரிவித்தார். மேலும் மசூதி கமிட்டியின் சார்பில் தம்பதியினருக்கு 10 சவரன் தங்கம் மற்றும் 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரள முதல்வர் பாராட்டு:

இது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இளம் தம்பதியினரை வாழ்த்தி, மத நல்லிணக்கத்தின் இத்தகைய அழகான உதாரணங்களை கேரளம் எப்போதும் ஆதரித்து வந்துள்ளது என்றார்.

மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. விஜயன் தம்பதியினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், ஜமாத்தாருக்கும் எனது பாராட்டுள் என அவர் தெரிவித்துள்ளார்.

“கேரளா ஒன்றாகும், நாங்கள் ஒற்றுமையாக இருப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.