டெல்லியில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்து கொள்ள, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
எஸ்.சி.ஓ வில் அங்கம் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய எட்டு உறுப்பு நாடுகள் 4 பார்வையாளர்கள் மற்றும் பிற சர்வதேச உரையாடல் கூட்டாளர்களுக்கும் ( international dialogue partners) அழைப்பு விடுக்கப்படும். பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு இந்த கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை புதுதில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எஸ்சிஓ என்பது சீனா தலைமையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு ஆகும். இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த 2017 ம் ஆண்டில் இணைத்து கொள்ளப்பட்டன. இந்தியா முதல் முறையாக எஸ்சிஓ உச்சி மாநாட்டை நடத்துகிறது.
அக்டோபரில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இம்ரான் கான் கலந்துகொள்வாரா என்பது குறித்த தகவலை பாகிஸ்தான் அரசு இன்னும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டுகளில் எஸ்.சி.ஓ மாநாட்டில் கலந்து கொள்ள அரசாங்கத் தலைவர்களுக்கு பதிலாக வெளியுறவு மந்திரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
இம்ரான் கான் இந்தியா வர முடிவு செய்தால், அவர் பிரதமராக இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாக அமையும். மேலும் இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தை நடத்தும் சூழலையும் உருவாக்கலாம்