இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்துக்கள் வழிபடும் லட்சுமியின் படத்தை அச்சிட்டால் இந்திய ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கூட்டும் என பாஜக தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மத்திய பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் ‘சுவாமி விவேகானந்த வ்யக்யன்மாலா’ என்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் அச்சிடப்படும் நோட்டுகளில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, இதை பற்றி மோடி தான் முடிவு செய்ய வேண்டும். இதை நான் வரவேற்கிறேன். விநாயகர் தடங்கல்களை நீக்குவார். எனினும் லட்சுமியின் படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட்டால் ரூபாய் மதிப்பு கூடும் என்றே நான் சொல்வேன். இதற்கு மாற்று கருத்து யாரும் கூற மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும் விரைவில் பொது சிவில் சட்டத்தை பாஜக அமலுக்கு கொண்டு வரும் எனவும் அவர் கூறினார்.