Indian Economy

வேலைவாய்ப்பின்மை, வறுமையினால் அனுதினமும் 10 பேர் உயிரழப்பு ! – அதிர வைக்கும் புள்ளி விவரம்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் காரணத்தால் தினம் 9 ஆண்கள், 1 பெண் என்ற விகிதத்தில் மரணித்துள்ளனர்.

தேசிய குற்றப் பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) வெளியிட்ட தற்கொலைகள் குறித்த சமீபத்திய தரவுகளிலிருந்து கீழ்கண்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2018ம் ஆண்டில் மட்டும் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். இதே 2017 ல் 1.3 லட்சம் என இருந்தது. எனவே 2018ம் ஆண்டில் 3.6% தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளது. ஒப்பீட்டளவில் வேலையின்மை காரணமாக மட்டுமே நடைபெற்ற தற்கொலைகள் 14% அதிகரித்துள்ளது. குடும்பப் பிரச்சினை (30.4%) காரணமான தற்கொலைகளிலும் 4.8% அதிகரித்துள்ளது.

Image result for suicide

அதிரவைக்கும் புள்ளி விவரங்கள் :

மொத்த தற்கொலை மரணங்களில் குடும்பப் பிரச்சினைகளுக்கு அடுத்தபடியாக 18% இறப்புகள் நோயின் காரணமான நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து திருமண பிரச்சினைகள் 6.2% ஆகும். இந்த இரண்டு காரணங்களால் ஏற்படும் இறப்புகளும் 2017 உடன் ஒப்பிடும்போது 14% அதிகரித்துள்ளன. 2014 மற்றும் 2018 க்கு இடையில் வேலையின்மை, வறுமை மற்றும் போதைக்கு அடிமையாதல், ஆகிய இந்த மூன்று காரணங்களால் இந்தியா மொத்தம் 45,743 பேரை இழந்துள்ளது –

இவற்றுள் 12,373 பேர் வேலையின்மை காரணத்தாலும் 6,957 பேர் வறுமை காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மரணித்தவர்கள் வயது :

வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டவர்களில், 20% பேர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும் 10% பேர் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் சுமார் 11% பெண்கள். வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களில், பெரும்பாலோர் (469) 30-45 வயதுக்குட்பட்டவர்களாகவும், பெண்கள் 15% ஆகவும் உள்ளனர்.

Refer : http://ncrb.gov.in/StatPublications/ADSI/ADSI2018/ADSI2018.html