Indian Economy Modi Subramanian Swamy

சு.சுவாமி : மோடிக்கு பொருளாதாரம் புரியல – என்னை நிதி அமைச்சர் ஆக்குங்க!

வியாழக்கிழமை சென்னையில் நடந்த தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்
கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி “பிரதமருக்கு பொருளாதாரம் பற்றிய புரிந்துணர்வு இல்லை” என்றும் நிர்மலா சீதாராமன் பற்றி அதிகமாக ஒன்றும் கூறாமல் இருப்பதே நல்லது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன் ஒரு பைத்தியக்காரர் :

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பைத்தியக்காரர். அவர் வட்டி விகிதத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தார், இதன் காரணமாக “நிதி மூலதன செலவு அதிகரித்து சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடத் தொடங்கின” என குற்றம்சாட்டினார்.

நிர்மலா சீதாராமன்

பொருளாதாரம் என்பது ஒரு மிகப்பெரிய துறை. அதிலுள்ள ஒரு துறை மற்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். வெறுமென ஜெ என் யூ வுக்கு சென்று பட்டம் வாங்கி விட்டால் பொருளாதாரம் படித்து விட்டவராக ஆகிவிட முடியாது என கூறி நிர்மலா சீதாராமனை பற்றி விமர்சித்தார்.

என்னை நிதி அமைச்சர் ஆக்குங்க – பிரதமர் பதவி கேட்க மாட்டேன் :

மோடிக்கு பொருளாதாரம் புரியவில்லை எனவே என்னை அவர் நிதி அமைச்சராக்க வேண்டும் என கூறிய அவர் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் மோடியை தனக்குத் தெரியும் என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் நல்லுறவு கொண்டவர்கள் எனவும் சுவாமி கூறினார்.

விரும்பவில்லை

மேலும் “எனது பிரச்சினை என்னவென்றால், நான் ஒரு பொருளாதார நிபுணர் மட்டுமல்ல, நான் ஒரு அரசியல்வாதியும் கூட. நான் நிதி அமைச்சகத்தைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு விட்டால், அடுத்ததாக இவன் பிரதமர் பதவியையே கேட்டு விடுவான் என சிலர் நினைக்கிறார்கள். மோடிக்கு இது பிடிக்கவில்லை” என்றார் சுவாமி.

நிர்மலா சீதாராமன் மீது தாக்கு:

“நமக்கு தற்போது ஏற்பட்டுள்ளது ‘டிமாண்ட்’ தொடர்பான பிரச்சினை. ஆனால் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் துறைக்கு வரிவிலக்கு அளிக்கிறார். சிக்கல் கார்ப்பரேட் துறை அல்ல, வாங்கும் திறன் (Purchasing power) எங்கு செலவிடப்பட வேண்டும் என்பது தான் பிரச்சினை.

பொய்யான வளர்ச்சி

இன்று நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் வருமான வரியை முற்றிலுமாக ஒழிப்பதாகும். நிலையான வைப்பு வட்டி விகிதங்களையும் நாம் அதிகரிக்க வேண்டும்.அப்போது நாட்டின் பொருளாதாரம் தானாக வளர்ச்சியடைவதை நீங்கள் காண்பீர்கள்” என கூடினர் சு.சுவாமி

மோடியை விட நான் தான் பெஸ்ட்:

பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதை பாஜக ஏன் ஒப்புக் கொள்ளவில்லை என்று கேட்கப்பட்டதற்கு, : “இதுவரை பதவி வகித்திராத சிறந்த நிதி மந்திரி என்று என்னை பற்றி நீங்கள் சொன்னீர்கள். திரு. மோடியிடம் என்னை வைத்து முயற்சி செய்து பார்க்க சொல்லுங்கள்.” என்று சுவாமி கூறினார்.

Related image

பிரதமர் மோடியை விட தான் ஒரு பெரிய இந்துத்துவா ‘ஐகான்’ என்று கூறிய அவர், “மோடியைப் போலல்லாமல்” சொல்வதை அர்த்தப்படுத்த கூடியவன் நான் எனவும் அவர் கூறினார்.