தீபிகா படுகோனை ஆதரித்து, முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பாசிச பயங்கரவாத கும்பல் மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அதில் காயம் அடைந்தவர்களை காண பிரபல பாலிவுட் நடிகை தீபிகா ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்திற்கு நேரே சென்றார்.
தீபிகா படுகோனே :
பாசிசவாதிகள் உச்சியில் இருக்கும் இந்த காலத்தில் தைரியமாக முன் வந்து தனது ஆதரவரை தெரிவித்த கதாநாயகிக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், பாஜகவினர் அவரை மிகவும் மோசமாக விமர்சித்தனர். “இந்நிலையில் தீபிகா படுகோனே வின் படம் ரிலீஸ் ஆகவிருந்த நிலையிலும் கூட அதை அசட்டை செய்யாமல் ஜே.என்.யூ சென்று மாணவர்களின் அமைதி போராட்டத்தில் கலந்து கொண்டது பாராட்டுக்கு உரிய விஷயம்” என ரகுராம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா :
மேலும் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது குடும்பத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளான போதிலும் பாரபட்சமின்றி தனது கடமையைச் செய்து வருவதானது உண்மை, சுதந்திரம் மற்றும் நீதி என்பது சிலருக்கு உயர்ந்த வார்த்தைகள் மட்டுமல்ல மாறாக அவர்களை தியாகம் செய்யவைக்கும் வாழ்வின் இலக்கணங்கள் என அவர் லவாசாவை பாராட்டி கருத்து தெரிவித்துளளார்.
மேலும் தேர்தல் செயல்முறை விதிமீறல் (2019) விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ‘கிளீன் சிட்’ கொடுக்க மறுத்த அசோக் லவாசாவை வெகுவாக பாராட்டினார் ரகுராம் ராஜன். மோடி ஆட்சிக்கு வந்த உடன் லவாசாவின் குடும்பத்தை சேர்ந்த ஐவர் மீது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிஏஏ குறித்து சூசக கருத்து :
“பல்வேறு மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக அணிவகுத்துச் செல்வதைப் பார்க்கிறோம், அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக உண்டாக்கும் செயற்கையான பிளவுகளை நிராகரித்தவர்களாக . இந்துக்களும் முஸ்லிம்களும் நமது தேசியக் கொடியின் பின்னால் கைகோர்த்து செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இவை நமது அரசியலமைப்பின் ஜோதி இன்னும் பிரகாசமாக எரிகிறது என்பதையே காட்டுகின்றது,” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.