Muslims

டாக்ஸிலா பல்கலையின் ரோபோடிக்ஸ் போட்டியில் மதரஸா மாணவர்கள் வெற்றி..

டாக்ஸிலா ஹைட்டெக் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ரோபோடிக் போட்டியில் ஜாமியா பைதுல் சலாம் மதரஸா மாணவர்கள் பங்கேற்றனர். மதரஸா மாணவர்கள் மற்ற 20 தலைசிறந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை வீழ்த்தி ரோபாட்டிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர்.

Image may contain: 2 people, text

அது மட்டுமின்றி உருது பேச்சுப் போட்டி மற்றும் அதே நாளில் ஹைடெக்கில் நடத்தப்பட்ட ‘ஸ்பெல்லிங் பீ ‘ போட்டியிலும் வென்றுள்ளனர். பொதுவாக மத்ரஸா மாணவர்கள் என்றாலே உலக அறிவு இல்லாதவர்களாகவும் மதவெறி கொண்டவர்களாகவும் மீடியாக்களால் சித்தரிக்கப்படும் வேலையில் மதரஸா மாணவர்களின் இந்த வெற்றியானது அவர்களின் புத்திசாலித்தனத்தையும் திறமையையும் காட்டும் விதத்தில் இது அமைந்துள்ளது என பாகிஸ்தானில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image may contain: 4 people, people standing and text

ஒவ்வொரு ஆண்டும் ஹைடெக் பல்கலைக்கழகம் ஒரு மெகா-இன்டர்-பல்கலைக்கழக நிகழ்வை ஏற்பாடு செய்கிறது, இது வெவ்வேறு பாடத்திட்ட மற்றும் இணை பாடத்திட்ட போட்டிகளைக் கொண்டுள்ளது. 20 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றன. ரோபோஃபீஸ்டா என்பது நிகழ்வின் மிகவும் சிறப்பான போட்டிகளில் ஒன்றாகும்.

மாணவர்களின் வெற்றியை தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன..