இந்திய ஒன்றியம் கொண்டுவந்த CAA – NRC சட்டங்களுக்கு எதிரான அமைதி பேரணியில் கலந்துகொண்ட காரணத்திற்காக நார்வே நாட்டு சுற்றுலாப்பயணி ஜேன் மேட்டி ஜோஹன்ஸன் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இவர் கடந்த அக்டோபரில் டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்து கொச்சியில் தங்கியுள்ளார். மக்கள் நடத்திய பேரணியில் அவரும் ஆர்வத்துடன் பதாகை ஏந்தி கோஷங்களை எழுப்பியுள்ளார். அவரது பேஸ்புக் தளத்திலும் தாம் பங்குபெற்ற பேரணி பற்றிய படங்களை பதிவேற்றியுள்ளார்.
இதனை அறிந்து இந்திய அரசு இவரை வெளியேற அறிவிக்கை வெளியிட்டுள்ளது. ஜேனுக்கு வயது 74.
கொச்சி காவல் துறையினரிடம் கூறிய பிறகே போராட்டத்தில் தான் பங்கு கொண்டதாக ஜோஹன்ஸன் தெரிவித்துள்ளார். எனினும் பாசிச ஊடுருவிகள் இவரை பற்றி மேலிடத்தில் கூற நாட்டை விட்டு வெளியேறுமாறு (Bureau of Immigration) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் மீண்டும் அவர் தங்கி இருந்த ஓட்டலுக்கு நேரே சென்ற அதிகாரிகள் உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர், அவர் எழுத்து வடிவில் ஆவணம் தாருங்கள் என்று கேட்டுள்ளார், ஆனால் அந்த இமிகிரேஷன் அதிகாரிகள் தர முடியாது எனவும் மீறி இங்கு தங்கி இருந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி உள்ளனர். இதனையடுத்து தனது நண்பர் ஒருவர் மூலம் சுவீடன் நாட்டுக்கு டிக்கட் புக் செய்து அன்றய இரவே இந்தியாவை விட்டு வெளியேறினார் ஜோஹன்ஸன். இதை அவரது பேஸ்புக் கணக்கில் அவரே கூறியுள்ளார்.
வந்தாரை வரவேற்கும் இந்திய இன்றைக்கு அமைதியாக இந்திய குடிமக்களுடன் பங்கெடுத்த ஒருவரை கழுத்தை பிடித்து வெளியேற்றாத குறையாக நாட்டை விட்டு துரத்தி உள்ளது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது
ஜெர்மன் மாணவர் ஜேக்கப்பிற்கு பிறகு இவர் இரண்டாவது வெளிநாட்டினர். ஏற்கனவே இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்க, பிரிட்டன் ஆகிய நாடுகள் தங்களது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது நாம் அறிந்தது தான். இதே ரீதியில் சென்றால் இந்தியா இருண்ட கண்டமாவது உறுதி என்ற ரீதியில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஸிஸம் மட்டுமல்லாது பழமைவாதம் மற்றும் அடிப்படைவாத கருத்துக்களை சுமந்துகொண்டுள்ள பாஜக அரசின் ஆட்சியில் இந்திய கற்காலத்தை விட கீழிறங்கி ஆதிகாலத்திற்கு சென்றுவிடும் போன்ற ரீதியிலான கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களிலும் காண முடிகிறது
இந்த உலகத்திலேயே உள்நாட்டு குழப்பத்திற்கு வெளிநாட்டினர் வந்து அந்த அரசினை எதிர்த்து மக்களுக்கு ஆதரவு தருவது இதுவே முதல்முறை.