பிரதமர் மோதி இன்று சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக முயற்சி மேற்கொண்டதாகவும் எனினும் மேகமூட்டத்தால் அவரால் பார்க்க முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஸ்டைல் ஆக நின்று போஸ் கொடுக்கும் கண்ணாடியின்(Maybach) மதிப்பு 2159 டாலர்(USD) என தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் ஒரு 1.5 லட்சத்திற்கும் மேல் (1,54,313.01) . நான் ஒரு பக்கீர் என்று மேடை தோறும் பேசி கொண்டு மறுபுறம் மக்கள் வரி பணத்தில் லட்ச ருபாய் மதிப்புள்ள ஆடைகளையும், கண்ணாடியையும் போட்டு கொண்டு திரிவதா என மக்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அதே வேலை மீம்ஸ் களும் பரவி வருகிறது.
நாடு முழுவதும் சிஏஏ மற்றும் என்ஆர்சி திட்டங்களுக்கு எதிராக எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை மோடி அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத அளவிற்கு நிலைமை சென்று கொண்டுள்ளதால்இவற்றை திசை திருப்பவே, நாட்டில் தடுப்பு முகாம்கள் இல்லை என பொய் பேசுவது, நாள் ஒன்றுக்கு மாற்றி மாற்றி பேசி மக்களை குழப்புவது, மீம்ஸ் போட ஏற்றவாறு
போட்டோ போஸ் கொடுப்பது என பிரதமர் இவ்வாறு தொடர்ந்து செய்து வருகிறார் என விபரம் அறிந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.