Hindutva Students Uttar Pradesh

உபி : ‘ஜெய் ஸ்ரீ ராம் என கத்திக்கொண்டு அலிகார் பல்கலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்’ : உண்மை கண்டறியும் குழுவின் கூட்டறிக்கை வெளியீடு!

ஜாமியா போராட்டத்தை போலவே வீரியம் பெற்ற அலிகார் மாணவர் போராட்டம், அங்கு உபி போலீசாரால் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பான செய்திகள் ஊடகங்களால் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை தேடித்தேடி தாக்கிய போலீசாரும் ஆர்ஏஎஃப் எனப்படும் ராபிட் ஆக்‌ஷன் ஃபோர்ஸும் , ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பியவாறு தாக்கியதாக மாணவர்கள் மற்றும் சம்பவத்தை நேரே கண்ட பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் டெல்லி ஜாமியா மிலியாவில் தொடங்கிய பாஜக அரசின் CAA குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவளிக்க முதலில் முன்வந்தவர்கள் அலிகார் பல்கலை மாணவர்கள் ஆவர். ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்த போலீசாரை எதிர்த்தும் அலிகார் பல்கலை மாணவர்களால் அமைதியான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The Siege of Aligarh Muslim University ” – என்ற பெயரில் அலிகர் பல்கலையில் அரங்கேறிய போலீசாரின் வன்முறைகள் குறித்து சமூக ஆர்வலர்களால் நேற்று (24-12-19) ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 15 அன்று அலிகார் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கொடூர தாக்குதல்களை பற்றிய உண்மை தன்மையை அறிய, டிசம்பர் 17 அன்று, அப்பல்கலை வளாகத்திற்கு, எழுத்தாளர் ஹர்ஷ் மந்தர் அவர்களின் தலைமையில் அங்கு வந்த சமூக போராளிகள், எழுத்தாளர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களின் குழு செய்த ஆய்வுகளின்படி அலிகார் பல்கலையில் மிகப்பெரிய கலவரம் நிகழ்த்தப்பட்டுள்ளதும், அங்கு ரிஜிஸ்டார், தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் வாயிற்காவலர்கள் உட்பட 100 மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், மருத்துவர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட ரிப்போர்ட்டின்படி நியாயமான முறையில் போராடியரவர்களின் மீது கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது போலீஸ் என தெரியவந்துள்ளது.

அவர்களில் பலரும் படுகாயமும், எலும்பு முறிவுகளும் , மண்டை உடைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎச்டி பயிலும் மாணவர் ஒருவரின் முன்னங்கையில் ஸ்டன் கிரெனெட் வெடித்ததில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவர்கள் அவரது முன்னங்கையை நீக்கியுள்ளனர்.

https://twitter.com/CitizenKamran/status/1207037589984702464
https://twitter.com/DrMohamednisar1/status/1209431300840423424

போராட்டத்திற்கு பாதுக்காப்பு. கொடுக்க அனுப்பப்படும் பொழுதே போலிசாருக்கு வன்முறையை நிகழ்த்துவதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவர்களது ஆய்வறிக்கையை படிக்கும் போது விளங்க முடிகிறது. மாணவரிடையே உட்புகுத்தப்பட்ட மாணவர் அடையாளமில்லாத பலரும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு போலீசார் மீது கல்லெறிய தொடங்கினர். மாணவர்கள் அனைவரும் பின்தங்கியிருந்த நிலையிலும் கலகம் செய்யவென்றே ஏற்பாடு செய்யப்பட்டு உட்புகுத்தப்பட்ட அவர்களில் சிலர் மட்டும் முன்னேறிச்சென்று பல்கலைக்கழக முதன்மை வாயிற்கதவின் கேட்டினை ஆட்டி அசைத்து நாலு துண்டுகளாக உடைத்து எரிந்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த மாணவர்கள் பலருக்கு மருத்துவ உதவிகளும் போலீசாரால் மறுக்கப்பட்டது, ஆம்புலன்ஸ் ஓட்டி வந்த ஒரு ஓட்டுனரை தடுத்து நிறுத்தி அவரை தாக்கிய போலீசார், ஹெரிடேஜ் மோரிசன் ஹாஸ்டலில் வைத்து மாணவர்களுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த சக மாணவர்களை விரட்ட அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசினர், அங்கிருந்த அறைகளில் ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிந்தது.அலிகார் பல்கலையின் மருத்துவப்பிரிவிலிருந்து மருத்துவர்கள் சுமார் பத்து ஆம்புலன்ஸ் வரை அனுப்பிவிட்டும் அதில் ஒன்றை கூட போலீசார் உள்ளே வர அனுமதிக்கவில்லை மாறாக அவற்றின் மீது தடியடி செய்து உடைத்து சேதப்படுத்தினர். போலீசார் செய்த தாக்குதல்கள் அனைத்தும் தீவிரவாதிகள் மீதான அனுகுமுறை போலவே இருந்ததாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர் தெரிவிக்கின்றார்.

போராட்டங்களில் மக்களுக்கு பாதுகாப்பு தரவே போலிசார் அனுமதிக்கப்படுகின்றனர் ஆனால் இங்கே வழக்கத்திற்கு மாறாக போர் சூழலில் பிரயோகிக்கப்படும் ஸ்டன் கிரானைட்ஸ் எனும் தீவிர ஆயுதங்களையும் , கலவர யுக்திகளையும் கையாண்டுள்ளனர் என்கிறார். சாதாரண போராட்டங்களில் போது மருத்துவ உதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் தாராளமாக செய்து கொடுக்கப்பட வேண்டும் ஆனால் இங்கே அது மறுக்கப்பட்டுள்ளது.

அதுபோக கலவரத்தை தொடங்கிய போலிசார் அனைவருமே இஸ்லாமிய வெறுப்பில் (Islamophobia) ஊறியவர்கள் போலவே தெரிகிறது காரணம் அவர்கள் முஸ்லிம் மாணவ மாணவிகளை தேடித்தேடி அடிக்கும் போதும் வித்தியாசமாக ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கத்திக்கொண்டே மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். எனினும் சட்டத்தின்படி எந்தவொரு போலீசும் எந்த மதமோ அல்லது சாதியையோ முன்னிருத்துபவராக இருக்க கூடாது.

ஜாமியா மிலியாவில் கூட கையாளப்படாத இந்த கொலை வெறித்தாக்குதல்கள் அலிகார் முஸ்லிம் பல்கலையின் மீது பிரயோகிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மிகப்பெரிய திடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போலிசார் செய்த தாக்குதலில் 100 பேர் படுகாயம் அடைந்தும் மேலும் 20 பேர் உயிருக்கு போராடிய நிலையிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பல்கலை சார்பில் சயீதா ஹமீத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கப்பெற்ற எல்லா மாணவர் போராட்டங்களிலும் அலிகார் முஸ்லிம் பல்கலை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் வன்முறைகளும் தான் மிக மிக கொடுமையானவை என ரிப்போர்ட் அதாரிட்டி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

ரப்பர் குண்டுகள், ஸ்டன் கிரானைட், சவுன்ட் பாம்ஸ் , கண்ணீர் புகை குண்டுகள் என போர்சூழலில் பயன்படுத்தப்படும் அதி தீவிர ஆயுதங்களை மாணவர் மீது உபயோகித்த காரணம் என்ன? ஆய்வுக்குழு அலிகார் பல்கலையை செல்லும் முன்னரே கிட்டத்தட்ட எல்லா தடயங்களும் அழிக்கப்பட்டது மேலும் சந்தேகங்களை தூண்டிவிடுகிறது