எங்களுக்கு இந்திய அரசு அளிக்கும் குடியுரிமை வேண்டாம் என மோடி – அமித் அளித்த அற்புத ஆஃபரை நிராகரித்த பாகிஸ்தான் இந்து கவுன்சில்கள். மோடி இந்திய இந்துக்களுக்கு மட்டுமல்லாது உலகில் வாழும் மற்ற இந்துக்களுக்கும் ஆபத்தானவர் என சாடல்.
இந்தியாவில் பரம்பரையாக வாழும் இஸ்லாமியர்களை அகதிகளாக்கிவிட்டு எங்களுக்கு குடியுரிமை அளிப்பதாக கூறுவது சனாதன தர்மத்திற்கே எதிரானது . இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். சாதியாலும் மதத்திலும் பாகுபாடு பார்த்து மனிதர்களிடம் வேற்றுமை பாராட்டுவது இந்துத்துவ சனாதன தர்மம் ஏற்காத செயல். பாகிஸ்தானில் குடியுரிமை பெற்ற இந்து சகோதரனான திலீப் குமார், தற்போது துபையில் இருந்து தொழில் நடத்தி வரும் இவர் கூறுகிறார், எங்களை இந்து என கூறி எந்தவொரு முஸ்லிம் நாடும் விலக்கி வைக்கவில்லை. அப்படி செய்தால் இப்போது நாங்கள் வாழும் வளமான வாழ்வினை இந்திய பாஜக அரசால் கொடுக்க முடியுமா? என்கிறார்.
மற்றோரு பாகிஸ்தான் குடியுரிமை பெற்று அங்கு சுபிட்சமாக வாழும் பாகிஸ்தான் இந்து கவுன்சிலின் உறுப்பினரான ராஜா அஸர் மங்லானி கூறுகிறார், இந்தியா முஸ்லிம்களை அகதிகளாக்க முயற்சிப்பதும் புதிதாக சட்டமியற்றி வித்தியாசாக நடந்துகொள்வது பாகிஸ்தான் மட்டுமல்லாது மற்ற முஸ்லிம் நாடுகளிலுள்ள இந்துக்களுக்கும் பிரச்சனையை உருவாக்கிவிடும். இங்கே வாழும் நாங்கள் இந்தியாவில் ஒருபோதும் குடியுரிமை பெற மாட்டோம், வலிய வந்து கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம் என்கிறார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் மைனாரிட்டி கவுன்சில் மற்றும் இந்து கவுன்சில்கள் இரண்டும் தாமாக முன்வந்து இந்தியா அளிக்க முன்வரும் குடியுரிமையை நிராகரித்துள்ளன.
பாகிஸ்தானின் கிறுஸ்தவ அமைப்பின் தலைவரான ரெவரன்டு.ஜோஹன் காதிர் கூறியதாவது, இந்தியாவின் பாஜக அரசு அளிக்கும் குடியுரிமையை பெற்று இந்தியாவில் அகதிகளாக உரிமைகளற்றவர்களாக வாழ எங்களுக்கு விருப்பமில்லை. மேலும் இந்துத்துவ சக்திகள் கட்டமைக்கும் இந்து ராஷ்டிரம் என்பது நாளை கிறுஸ்தவர்களுக்கும் பிரச்சனையை கொடுக்கும் என்பதே உண்மை. அதுபோல இந்துக்கள் என பலரையும் சமநிலை அளிக்க மறுக்கும் இந்துத்துவ சக்திகள் எப்படி மற்ற சாதியினரை சமமாக நடத்துவார்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். அவர் பாகிஸ்தானில் இருந்து ஷார்ஜா நாட்டுடன் வணிகத்தொடர்பிலும் இருந்து வருகிறார்.
ஒரு உண்மையான இந்து இந்திய பாஜக அரசு கொண்டுவந்திருக்கும் இந்த மக்கள் விரோத சட்டத்தினை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார் என தங்களது தரப்பு கருத்தினை தெரிவித்துள்ளனர் பாகிஸ்தான் நாட்டு சீக்கிய அமைப்பின் தலைவரான கோபால் சிங். உலகம் முழுதும் பரவியுள்ள சீக்கியர்களும் இந்தியாவின் இச்சட்டத்திற்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர் என்றார் அவர்.
பாகிஸ்தான் பார்லிமெண்டின் மக்களவையில் இருக்கும் செனட்டர் அன்வர் லால் தியான் என்பவர் ,பாகிஸ்தான் கிறுஸ்தவ மைனாரிட்டி நலவாரிய தலைவராக உள்ளார் அவர் கூறியதாவது, இந்திய குடிமக்களுக்கான அரசியல் சாசனத்திற்கு விரோதமான இச்சட்டத்தை பாகிஸ்தான் கிறுஸ்தவர்கள் யாரும் ஆதரிக்கவில்லை.ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் இச்சட்டம் இந்திய அரசு அதன் கான்ஸ்ட்யூன்சிக்கே அவமரியாதையாகும் என்கிறார்.
220 மில்லியன் மக்கள்தொகை இருக்கும் பாகிஸ்தானில் 4% பேர் இந்துக்கள், சுமார் 8 மில்லியன் பேர் குறிப்பாக சிந்து ,பலூச்சி மற்றும் பக்தான்குவா மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறோம்…எங்களுக்கு நன்மை நாடுவதாக இருந்தால் தயவு செய்து இப்படி மத அடையாளத்தை வைத்து பிரித்தாளும் அரசியல் செய்யாதீர்கள் என மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளது பாகிஸ்தான் இந்து கவுன்சில். எங்களுக்கு குடியுரிமை வேண்டாம் என்பதை விட இந்தியாவிற்கும் CAA வேண்டாம் என்பதையே இவர்கள் பெரிதும் வலியுற்றுத்துகிறார்கள்.
இந்திய பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என எதுவுமே இந்திய குடிமகனுக்கான ஆவணமில்லை எனும்போது எந்த ஆவணத்தை அடையாளமாக வைத்து தேர்தல்களில் வாக்களிக்க அழைத்தீர்கள்? குடிமக்கள் அளித்த வாக்குகள் செல்லாது எனில் பாஜக அரசு பதவியேற்றதும் செல்லாது. ஒருநாட்டிலுள்ள ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவரது ஆவணங்கள் மட்டும் திடீரென செல்லாமல் போகும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்?
ஆக்கம் : நஸ்ரத்