மத அடிப்படையில் பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டிசம்பர், 19 அன்று நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர் முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர்.
இதில் சமூக ஆர்வலர்கள் யோகேந்திர யாதவ், ஜதின் தேசாய் மற்றும் திருமதி.மேதா பட்கர் ஆகியோர் தலைமையேற்று நடத்தவுள்ளனர். டெல்லி,மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மாநகரங்களிலுள்ள முஸ்லிம் இன்டலக்ச்சுவல் ஃபோரம் அமைப்பினர் சார்பாக இதில் அனைவரும் பங்கேற்கின்றனர் . இந்த போராட்டித்திற்கான தினமான டிசம்பர், 19 அன்று தான் சுதந்திர போராட்ட தியாகிகளான அஷ்பகுல்லாஹ் கான், ராம்பிரசாத் பிஸ்மில் மற்றும் ரோஷன் சிங் ஆகியோரை கக்கோரி ரயிலை கொள்ளையடித்ததாக கூறி ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டதனை நினைவுகூறும் வகையிலும்…இந்தியா இன்னுமொரு சுதந்திரப்போரினை முன்னேற்க வேண்டிய தருணத்தில் இருப்பதை உணர்த்தவேண்டிய காரணத்தாலும் தான் என இந்த அமைப்பின் தலைவர் பைரோஸ் மிதோபோர்வாலா செய்தியாளர்களிடையே அறிவித்தார்.
இந்திய அரசியல் சாசனத்தின் ஆர்டிகிள் 14,15 மற்றும் 25 ஆகிய சட்டத்திட்டங்களை அவமதிக்கும் விதமான இந்த சட்டச்சிருத்தம் எந்தவித பலனையும் யாருக்கும் நல்கப்போவதில்லை மாறாக பாஸிஸவாதிகளின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் எனும் பயங்கரமான கொள்கையை அமுல்படுத்த வழிவகுக்கும் என்றார்.
இந்திய முஸ்லிம்கள் வேறுவழியின்றி இந்துவாக மாற இதுவொரு பகிரங்க அச்சுறுத்தல் எனவும், வேறு வழியின்றி அவர்கள் இந்துவாக மாற கர் வாப்சி எனும் காரியங்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கான உரிமையோ சுதந்திரமோ கிடைக்கப்போவதில்லை. இங்கே மத சுதந்திரம் என்பதை அடித்து நொறுக்கி, அனைவரையும் இந்துவாக மாற்றி பிறகு அவர்களை தலித்துகளாக நடத்தும் மறைமுக திட்டங்களே அரங்கேறி வருகின்றன என கூறிய பைரோஸ்.., இயக்கம், அமைப்பு,கட்சி மற்றும் மத பாகுபாடு கடந்து அனைவரும் இதில் பங்கேற்க அழைப்புவிடுத்தார்.
அசாமில், தாங்கள் இந்நாட்டு குடிமக்கள் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், அங்கே 14 லட்சம் முஸ்லிம்களும்,தலித்துகளும் , பழங்குடிகளும் தெருத்தெருவாக ஓடித்திரிகின்றனர். ஒவ்வொரு ஆவணத்தையும் சரிபார்க்கிறோம் என்கிற பெயரில் அரசு அலுவலங்களில் நிராகரிப்பு செய்து வருகின்றனர். இந்த சட்டத்தை எதிர்த்து குரல்கொடுக்காமல் போனால் பின்னாளில் இது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம், தலித் மற்றும் பழங்குடிகளுக்கும் அரசு சட்டமசோதாவில் குறிப்பிட்ட ஆறு மதங்களை தவிர ஏனைய மதம் சார்ந்த அல்லது மதம் சாராத யாவருக்கும் இது பெரும் பிரச்சனையாகவே அமையும். இது முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல என்பதனை உணருங்கள் என்றார்.
பைரோஸ் மிதோபோர்வாலா கடந்த 1987முதலே பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் ஸியோணிச இஸ்ரேலுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருபவர். ஏகாதிபத்ய சியோனிசம்-பிராமணீயம் இரண்டும் உலகின் சாபக்கேடுகள் என உணர்த்தும் வகையில் பல கருத்தரங்குகளை நடத்தியவர். இந்தியாவிலிருந்து ஜெருசலேம் நோக்கிய அமைதி பேரணி அமைப்பில் கலந்துகொண்ட ஒரே இந்தியர் இவராவார். ஹாமாஸ் மற்றும் ஃபத்தா அமைப்பின் தலைவர்களை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்தவர்.
தொடர்ந்து இஸ்ரேலின் ஆதிக்க கொடுமைகளை வெளியுலகிற்கு பகிரப்படுத்தும் சேவையில் இருக்கும் இவர் சாதி எதிர்ப்பு போராளி என்கிற பட்டப்பெயர் உண்டு. பலஸ்தீன், சிரியா,ஆப்கான் மற்றும் பர்மிய முஸ்லிம்களுக்காக குரலெழுப்பி வரும் இவரது பிரமாணீய எதிர்ப்பு பார்வை மிக ஆழமானது என்கிறார் Citizens for Justice and Peace அமைப்பின் தலைவர் ஜாவித் ஆனந்த்.
பலஸ்தீனில் போர் நடக்கும் தருணங்களில் காஸா கரைக்கு சென்று நேரடியாக தரவுகளை சேகரித்து வருவதில் வல்லவரான பைரோஸ் 2011 மும்பை குண்டுவெடிப்புகளில் காங்கிரஸின் பிராமணீய கரங்களுக்கும் பங்குண்டு என்பதை தெளிவுபடுத்தியவர்.
ஆக்கம் : நஸ்ரத்