காஞ்சிபுரம் மாவட்டம் அனுமந்தபுரத்தில் ராக்கெட் லாஞ்சர் வெடித்தது.
இதில் குவியல் குவியலாக வெடிபொருட்கள் சிறியதும் பெரியதுமான ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஏராளமான கையெறி குண்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை போல காட்சியளிக்கும் அங்கே மிக தீவிர வெடிமருந்துகள் கிடைத்துள்ளது.
ராக்கெட் லாஞ்சர் வெடித்து ராமகிருஷ்ணன் என்பவரும் அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர். ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் சொந்தக்காரர்ரும் ராமகிருஷ்ணனே ஆவார். கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோல ராக்கெட் லாஞ்சர் வெடித்து இருவர் இறந்துபோன சோகம் அடங்குவதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அனுமந்தபுரம் பகுதியில் இராணுவ பயிற்சி படையினர் பயிற்சி செய்வதற்காக ஆயுத கிடங்கு ஒன்று உள்ளது. அவ்வப்போது இங்கே ராணுவ பயிற்சிகள் நடைபெறும், ஆனால் பயிற்சி முடிந்தபிறகு மேலதிகாரிகளுக்கு கணக்கு காட்டியே ஆக வேண்டும் என்பதற்காக பயிற்சிபெறுவோர் அந்த உபயோகித்த வெடிகுண்டுகள் மற்றும் லாஞ்சர்களை எடுத்து சேகரித்து கிடங்கில் வைப்பர். சிலநேரம் தேவையில்லாத இரும்புகளை அப்படியே விட்டுவிடுவார்.
அதை பொறுக்கியெடுத்து எடைக்கு போடும் பழக்கம் இப்பகுதி மக்களிடையே வாடிக்கை தான் எனினும்… இப்போது ராமகிருஷ்ணன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் எதுவும் இராணுவ தளவாடத்தை சேர்ந்தது இல்லை எனவும் அவற்றில் இராணுவ குறியீடுகள் எதுவும் காணப்படவில்லை என்பதால் இவற்றை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என அந்த கிட்டங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நல்லவேளை ஊரும் பேரும் வேறையாக இருந்தது….
ஆக்கம் : நஸ்ரத்