கேரளா, கெல்லூர் நான்காம் மைல் நவீன ஆங்கில பள்ளியின் முன்னாள் மாணவியான நிஷானா கானம் , 9,371 மரக்கன்றுகளை தமது கைகளால் வளர்த்து அவற்றை யூ.ஏ.இ அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். மரக்கன்றுகள் வளர்ப்பதில் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ள இவரது சொந்த ஊர்
வயநாடு ஆகும், அங்கு புத்தேன்புராவில் கபீர்-ஹசினா தம்பதியினரின் மூத்த மகளான நிஷானா கானம், அமீரகத்தில் பணிபுரிபவராவார்..
தந்தை கபீர் யு.ஏ.இ அஜ்மானில் பணிபுரிகிறார்.. நிஷானா தொடக்கத்தில் அமீரகத்தின் ஹாபிடன்ட் பள்ளியில் பணிபுரிந்தபோதிலிருந்தே இந்த மரக்கன்றுகள் வளர்த்தும் மதிப்புமிக்க சாதனைக்காக செயலாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக நிஷானாவை கவுரவப்படுத்தும் விதமாக விழாவும் அமீரகம் சார்பாக நடத்தப்பட்டது. நிஷானா தற்போது அமீரகத்தின் ஆமர் சர்வீசில் பணிபுரிந்து வருகிறார்.