CAA West Bengal

அஸ்ஸாமை தொடர்ந்து மேற்கு வங்கம் – மத குறயுரிமைக்கு எதிராக எழுச்சி போராட்டம் !

அஸாம் மாநிலத்தை தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்திலும் நிலைமை மிக தீவிரமடைந்து வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து பொதுமக்கள் செய்த போராட்டத்தில் பொதுசொத்துகளுக்கு பங்கம் விளைவித்ததாக கூறி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை அங்கே மூவர் மரணமடைந்துள்ளனர். 12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்

இராணுத்தின் 26 பட்டாலியன் குழு அங்கே முகாமிட்டுள்ளது. இணையதள பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து மக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த ஒவ்வொரு பாஜக எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் வீட்டின் மூன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு பணிகளை முடக்கி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் ரயில்நிலையங்களை வந்தடைந்த போராட்டக்குழு அங்கே நெருப்பு வைத்து சேதம் விளைவித்திருப்பதாகவும் இதனால் அமித்ஷா வரவிருந்த ஷில்லாங் மீட்டிங் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சிலபத்தி,நால்பாரி, கவுஹாத்தி, திப்ருகர் ஆகிய இடங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களும் தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளன. தற்போது அங்கு All Assam Students’ Union (AASU), Asom Jatiyatabadi Juba Chatra Parishad and the Akhil Gogoi-led Krishak Mukti Sangram Parishad (KMSS) -ஆகிய அமைப்புகள் தான் மாணவர்களையும் பொதுமக்களையும் தலைமையேற்று இந்த போராட்டக்களத்தில் ஈடுபடுத்தி வருகிறது.

இவர்களை கட்டுப்படுத்த Third Force எனப்படும் ஒரு போலீஸ் படையை ஈடுபடுத்தி கூட்டத்தை கலைக்க ரப்பர் குண்டுகளை பிரயோகித்து வருகிறது அஸாம் அரசு. இங்கே நாம் நினைத்ததைவிடவும் மீகத்தீவிரமாக பிரச்சனை போய்கொண்டுள்ளது. அஸாமிகளின் இந்த நிலை மற்ற மாநில மக்களுக்கும் ஏற்படாதிருக்க வேண்டும்.

ஆக்கம் : நஸ்ரத்

Photo Credit: (PTI Photo/Ashok Bhaumik)