CAA

மத அடிப்படையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு!

மத அடிப்படையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.

அப்போது பாஜக வுக்கு விலைபோய்விட்டதாக கடுமையாக விமர்சிக்கப்படும் அதிமுக மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களித்துள்ளது. பாஜக வின் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக எம்பி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார். இது இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.