Haryana

இனி ஹரியானாவில் தனியார் மழலையர் (LKG,UKG) வகுப்புகள் கூடாது- அரசின் பாரபட்ச உத்தரவு !

ஹரியானா அரசு மாநிலம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் உள்ள கீழ் மழலையர் (LKG) பள்ளி மற்றும் மேல் மழலையர் பள்ளி (UKG) வகுப்புகள் மற்றும் நர்சரிகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் மனநல வளர்ச்சியை கவனத்தில்  கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  ரோஹ்தக்கின் தொடக்க கல்வி அதிகாரி விஜய் லக்ஷ்மி நந்தல் தெரிவித்துள்ளார். ஐந்து வயதை எட்டிய பிறகே குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட  வேண்டும், அது வரை குழந்தைகள் ஓடி ஆடி விளையாட வேண்டிய வயது, மனநல வளர்ச்சி அடைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளை விளையாட்டு பாடசாலை (playschool) அல்லது அங்கன்வாடிகளுக்கு அனுப்பி பயிற்றுவிக்கலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மட்டும் 4-5 வயதுடைய பிள்ளைகளுக்கு மழலையர் பள்ளி வகுப்புகள் நடைபெறுகிறது ஆனால் எங்களுக்கு மட்டும் அரசு பாரபட்சமாக தடை விதிக்கிறது. அரசு இந்த உத்தரவை திரும்ப பெறவில்லையானால் நாங்கள் வீதிகளில் இறங்கி போராடுவோம் எனவும் தனியார் பள்ளிககளின்  கூட்டமைப்பு தெரிவித்துள்ளது .