Tamil Nadu

தமிழக பெண்களின் கனிவான கவனத்திற்கு!

கைபேசியில் காவலன் செயலி உங்களுடன் இருக்கும் காவலன் .

ஹைதராபாத்தில் சகோதரி பிரியங்கா அவர்களுக்கு நடந்த அசம்பாவிதம் மனம் கனக்க செய்தது. அத்தகைய சந்தர்ப்பங்களை கையாளுவது எப்படி? காவல்துறை உதவியை பெறுவது எப்படி என பார்க்கலாம் .

பெண்கள் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை KAVALAN SOS என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எந்த ஒரு அவசர நிலையிலும் ஒரு க்ளிக் மூலம் காவல்துறை உதவியைக் பெற முடியும். மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் 3 பேருக்கும் அவசர உதவி கோரி குறுந்தகவல் செல்லும்.

  • இந்த செயலி தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம் .
  • இந்த செயலி இலவசமாக பயன்படுத்தலாம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் .
  •  உங்களது இக்கட்டான சூழ்நிலையில் எண் 100ஐ அழைக்க தயங்க வேண்டாம்.
  • பெண் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட, ஆண் குழந்தைகள் அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டியது ஒவ்வோரு பெற்றோரின் கடமை.

Android link –
http://bit.ly/2DHlN9V

என்று திருநெல்வேலி மாநகரம் காவலர் துணை ஆணையர் ச.சரவணன் தனது முகநூல் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை தமிழக மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது . இந்த செய்தியை பகிர்வோமே!