Sikhs Uttar Pradesh

உபி : பள்ளிவாசல் கட்டுவதற்காக சீக்கியர் அளித்த நில நன்கொடை!

சீக்கியர்களின் மதகுருவான குருநானக் தேவின் 550 வது பிறந்தநாளின் புனித மாதத்தில் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் மசூதி ஒன்றை கட்டிக்கொள்வதற்காக 70 வயதான சீக்கியர் ஒருவர் தனது நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சமூக ஆர்வலரான சுக்பால் சிங் பேடி இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அன்று புர்காசி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

900 சதுர அடி நிலத்திற்கான நில ஆவணங்களை நகர பஞ்சாயத்து தலைவர் ஜாஹிர் பாரூகி அவர்களிடம் அவர் வழங்கினார். அனைத்து மக்களையும் சமமாகவும் மரியாதையுடனும் நடத்த வேண்டும் என்ற குருநானக்கின் போதனைகளை மேற்கோளிட்டு அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் செய்தியை இதன் மூலம் பரப்ப விரும்புவதாகவும் சுக்பால் சிங் பேடி தெரிவித்தார்.

சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கான இந்த முயற்சியை இரு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் வரவேற்றுள்ளனர்.புர்காசி நகரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.