டிவிட்டரில் #Senthil Vasan M அவர்கள் போட்ட பதிவு தமிழில்..
1. நண்பர்களே, இதுவொரு நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்பு போல தெரிகிறது. IIT பேராசிரியர் சுதர்சன் என்பவர் யார்? அவரது செயல் திட்டங்கள் என்னென்ன? என்பதை குறித்து சில தரவுகளை நான் ஆராய்ந்து வந்தேன். சந்தேகமேயில்லாமல் அவர் ஒரு இந்துத்துவ வெறியர்.
2. 2006ல் இருந்து இந்த வீடியோ வெளிவந்த டிசம்பர் 2017 வரை இந்நபரின் பணிகளை நான் ஆய்வு செய்திருக்கிறேன். இவர் ஒரு தாராளவாதியாகவோ (அல்லது தனது அமெரிக்க கல்வியால் ஒரு போலி தாராளவாதியாகவோ) தான் முதலில் பார்ப்பதற்கு தெரிந்தார். மேலும் 2017-ல் சில RSS கூட்டங்களிலும் இவர் பங்கேற்றுள்ளார். தமிழக பிராமணர்கள் பலரிடத்தில் காணப்படும் மோடியின் ஆட்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய சித்தாந்த நிலைப்பாடுகள் இவரிடத்திலும் உண்டு.
3. இன்ஃபினிட்டி பவுண்டேசன் (Infinity Foundation) என்ற பெயரில் RSS-ன் துணை நிறுவனம் ஒன்று சென்னையிலும், உலகெங்கிலும் செயல்பட்டு வருகிறது. இது, இந்துத்துவா பேர்வழிகளை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களையெல்லாம் “இந்தியாவை உடைக்கும் பேர்வழிகள்” (Breaking India Forces) என கட்டம்கட்டி உள்ளே அடைக்கும். படத்தில் நீங்கள் பார்க்கும் இனவெறியனின் பெயர் வைத்தியநாதன் (இந்த கோமாளியை பற்றி நாம் பிறகு பேசலாம்).
தமிழகத்தில் வெறுப்பையும், இனவெறியையும் விதைத்து, பிராமணிய மேலாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதே இவர்களின் தெளிவான நிகழ்ச்சி நிரலாக இருக்கிறது என்பதை இந்த பவுண்டேசனின் வீடியோக்களை காண்பதன் வாயிலாக நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.
4. இந்த வீடியோக்களை ஒருமுறை நீங்கள் பார்த்தால், தமிழ்நாட்டில் தற்போது நிகழும் தேவையற்ற நிகழ்வுகள் அனைத்தையும் இந்த காணொளி வெளிப்படுத்தும் (சங் பரிவார கொள்கைகளுடன்) உங்களால் தொடர்புபடுத்த முடியும்.
1. https://youtu.be/mVOad19GbfY
2. https://youtu.be/e8OTfay7a2I
திருவள்ளுவரை காவிமயமாக்குவதில் தொடங்கி, மு.க. ஸ்டாலின் மீது தனிநபர் தாக்குதல் மற்றும் ஃபாத்திமா கொலை வரை. இவைகள் அனைத்தும் பொதுவான ஒரு “நூலால்” அழகாக முடிச்சுபோடப்பட்டுள்ளது.
5. அரசின் ஒரு பொதுவான கல்வி நிறுவனத்தில், இதுமாதிரியான ஒரு இனவெறி நிகழ்ச்சி நடந்தேறியபோது, IIT பல்கலைக்கழகத்தின் Humanities துறையின் கிட்டத்தட்ட மொத்த ஆசிரியர்களும் அதில் பங்கேற்றுள்ளனர். இந்த வீடியோக்களை பாருங்கள். நீங்களும் இந்த குழுவினரோடு இருப்பீர்கள் என்றால், சிறுபான்மையினரையும், தலித் மக்களையும், திராவிடர்களையும் நீங்கள் வெறுப்பீர்கள்.
6. நிகழ்வின் ஒரு பகுதியாக “இந்து வெறுப்பு” மற்றும் “திராவிடம்” என்ற தலைப்பில், ஒரு அமர்வில் சுதர்சன் பங்கேற்றுள்ளார். (மானிடா, இந்த நிகழ்வில் பிராமணர்களை தவிர எவரும் உயிரோடு உட்கார்ந்திருக்க முடியாது என நான் நினைக்கிறேன் 🤦♂️). ஆகவே பார்ப்பன பழமைவாதம் ஃபாத்திமாவை கொன்றிருக்கிறது. நாமெல்லாம் அதை மெளனமாக வேடிக்கை பார்த்துள்ளோம். அவளின் மரணத்திற்கு நாம் பதில் கூற வேண்டும்.
7. இது தொடர்பாக ஒரு இணைப்பு செய்தியையும் நாம் காணலாம். சென்னை மயிலாப்பூரின் டாக்டர் ரங்கா சாலையில் கடந்த செப்டம்பர் 12, 13 தேதிகளில் RSS-ன் கூட்டம் ஒன்று நடந்துள்ளது. இன்ஃபினிட்டி பவுண்டேசனின் தலைமையகமும் அங்குதான் உள்ளது. பல்வேறு முகமூடிகளில் தொலைகாட்சி விவாதங்களில் வரும் தமிழ்நாட்டில் உள்ள RSS-ன் நிறைய ஸ்லீப்பர் செல்களுடன் ரத்தன் ஷர்தா அந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். (மும்பையை மையமாக இருக்கும் ரத்தன், சங்பரிவாரத்தின் மூத்த சித்தாந்தவாதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது)
8. “சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்” என்ற தலைப்பில் ரத்தன் ஷர்தா எழுதிய நூலின் தமிழ் பதிப்பு வெளியீட்டு நிகழ்வே இந்த கூட்டத்தை இயக்குவதற்கான ஒரு சூழ்ச்சி (தலைப்பை பாருங்கள்). சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அவர்களுக்கு வெறுமனே திமுக/திக (குறிப்பாக ஸ்டாலின்) மற்றும் கிருஸ்தவர்களை தாக்க வேண்டும்.
9. இந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள கூட்டத்தின் பங்கேற்பாளர்கள், பா.ஜ.க-வின் ஊதுகுழல் இணையதளமான கதிர் நியூஸின் (Kathir News) நிர்வாக பொறுப்பில் அங்கம்வகிக்கும் உறுப்பினர்களும், கவுரவ ஆலோசகர்களும் ஆவார்கள். இந்த இணையதளத்தின் முழு பணியே, “Fake News” எனப்படும் கதைகள் புனையப்பட்ட போலி செய்திகளை பரப்புவதும், முக ஸ்டாலின் மற்றும் திமுக-வை தனிநபர் வசைபாடுவதுமாகும்.
10. ஆகவே, வள்ளுவர் சர்ச்சை, மிசா, ஃபாத்திமா ஆகிய அனைத்தும் ஒருவித கபடமான வடிவமைப்பில் இலக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. நாம் செயல்பட வேண்டும்.
Link. https://twitter.com/VasanMSV/status/1194746730039791616?s=19