பாபர் பள்ளிவாசல் தீர்ப்பு குறித்து தீர்ப்பில் திருப்தி இல்லை.முஸ்லிம்கள் ஏழைகள், ஆனால் 5 ஏக்கர் நிலத்தை வாங்கி மசூதி கட்ட எங்களுக்கு பணம் சேகரிக்க முடியும். உங்களின் தர்மம் எங்களுக்கு தேவையில்லை என்று மனம் வெதும்பி கூறி இருந்தார். இந்நிலையில் இந்த பேச்சு ஒரு சமூக மக்களை தூண்டிவிடும் (!) வெறுப்பு பேச்சு என்று கூறி வக்கீல் பவன் குமார் என்பவர் கடந்த சனிக்கிழமை அன்று ஜஹாங்கிராபாத் காவல் நிலையத்தில் ஒவைசிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தவுடன், ஒவைசி 5 ஏக்கர் நிலத்தை வழங்குவதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் நிலத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
பாபர் பள்ளிவாசல் குறித்து தீர்ப்பு வெளியானதில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தீர்ப்பு குறித்து கூறிய கருத்துக்களின் மூலம் அவர்களின் உண்மை சாயம் வெளுத்தது குறிப்பிடத்தக்கது.