மூன்று நாள் அரசு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் ஜெர்மன் நாட்டு பிரதமர் அங்கேலா மேர்க்கெல், “தற்போது காஷ்மீரில் மக்களின் நிலைமை நல்லதாக இல்லை, நிலைமை தொடர்வதற்கு ஏதுவாகவும் இல்லை. நிலைமை நிச்சயமாக சீராக மேம்படுத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மோதியுடனான சந்திப்பின் போது நிச்சயம் வலியுறுத்துவேன்” என்று நேற்று (1-11-19) கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தானது மோதி அரசங்கத்தின் பரப்புரையான “காஷ்மீரில் எல்லாம் நலம். மக்கள் மகிழ்சியாக உள்ளனர்” என்பதற்கு நேர் எதிராக அமைந்து உள்ளது என்றும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மயமாக்கிய பெருமை மோதி அரசாங்கத்தையே சாரும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.