BJP Karnataka

திப்பு சுல்தான் பாடத்தை நீக்க வேண்டுமாம்! – பாஜக எம்எல்ஏ கோரிக்கை!

கர்நாடகா : பதவியேற்ற உடனேயே, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.யெடியுரப்பாவின் அரசு, திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டங்களை மாநிலத்தில் தடைசெய்து உத்தரவிட்டது. இந்நிலையில்  18 ஆம் நூற்றாண்டடு மைசூர் மன்னர்  திப்பு சுல்தானைப் பற்றிய பாடங்களை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன் கூறியதை அடுத்து, மன்னரின் வழித்தோன்றல் திப்பு சுல்தானை வாக்குவங்கி அரசியலுக்கு பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து செய்தி நிறுவனமான ANI க்கு பேட்டி அளித்த திப்பு சுல்தான் வழி தோன்றல்  எம்.டி. ஷாஹித் ஆலம், “வரலாற்றை ஒருபோதும் நீக்க முடியாது. திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரர். இது தொடர்பாக நான் பிரதமருக்கு  கடிதம் எழுதுவேன்” என்று கூறினார்.

Download App from playstore http://bit.ly/2nOa5Wp

நேற்று கர்நாடக பாஜக தலைவர் அப்பாச்சு ரஞ்சன் கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ் குமாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளாள்ர் அதில் திப்பு சுல்தானின்  வரலாற்று குறிப்புகள் பாடப்புத்தகங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். தனது நிர்வாக மொழி பாரசீக மொழியாக இருந்ததால் திப்பு சுல்தானுக்கு கன்னடத்தின்  மீது மரியாதை இல்லை.அவர் இடங்களின் பெயர்களை மாற்றினார்,  பல கோயில்களையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் சூறையாடினார். கோடகுவில் அவர் 30 ஆயிரம் கோடாவாக்களை மதம் மாற்றினார்” என்று திரு ரஞ்சன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

பாஜக எம்எல்ஏவின் இந்த கருத்தானது தார்பாயில் வடிகட்டிய பொய் என்றும் அவர் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர் என்பதாலேயே  இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராடிய மாமன்னன் திப்பு சுல்தானை பற்றி இவ்வாறு அவதூறு பேசுகிறார். கர்நாடகாவில் ஆயிரம் பிரச்னை உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரணம் கிடைக்கவில்லை. அதை மத்திய அரசிடமிருந்து வாங்கி தருவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு இப்படி அவசியமற்ற கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதா என கூறி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர். 

நேற்று #BJPBetrayedKarnataka என்ற ஹாஷ்டாகை இந்திய அளவில் கர்நாடகா மக்கள் ட்ரெண்டிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image used for illustration purposes

Download App from playstore http://bit.ly/2nOa5Wp