Crimes Against Women

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:உபி மாநிலம் முதலிடம்!

ஓர் ஆண்டு கால தாமதத்திற்கு பிறகு வெளியான 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின்(என்.சி.ஆர்.பி ) தரவுகளின்படி பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் மாநிலமான உத்திர பிரதேசம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதில் முதல் இடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக மொத்தம் 56,011 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ள மாநிலமும் பாஜக ஆளும் மகாராஷ்டிரா- இங்கு 31,979 குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ளன. மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது டிஎம்சி ஆளும் மாநிலமான மேற்கு வங்கம்- இங்கு 30,002 பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பட்டியல் பழங்குடியினர் தொடர்பான குற்ற சம்பவங்கள் 2016 ல் 844 ஆக இருந்து 2017 ல் 720 ஆக குறைந்துள்ளது.மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளும் டில்லியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சரிவைக் கண்டுள்ளது தெரியவந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் மட்டுமே நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கிட்டத்தட்ட 3.6 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக புழக்கத்தில் உள்ள “தவறான / போலி செய்திகள் மற்றும் வதந்திகள்” பற்றிய தரவுகளை என்.சி.ஆர்.பி சேகரித்துள்ளது. இதன்படி மத்தியப் பிரதேசம் (138), உத்தரப்பிரதேசம் (32), கேரளா (18) என தரவரிசை படுத்தப்பட்டுள்ளது..