பனாஜி: கோவா வின் கலங்குட் மற்றும் கேண்டோலிம் கடற்கரை கிராமங்களில் உள்ள 76 மாடுகள் அசைவ உணவு பழக்கத்திற்கு மாறி விட்டதாக அம் மாநிலம் கழிவுப் பொருள் மேலாண்மை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார். மேலும் மாடுகளை மீண்டும் சைவ உணவு பழக்கத்திற்கு மாற்றிட கால்நடை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோசாலையில் வழக்கமாக வழங்கப்படும் புல், வைக்கோல் மற்றும் சிறப்பு உணவுகளை அந்த மாடுகள் சாப்பிடுவது இல்லை மாறாக சிக்கன், மட்டன், மீன் வறுவல் போன்ற அசைவ உணவுகளை மட்டும் தான் தின்கின்றன. இந்த மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்த போது ஓட்டல்களால் கொட்டப்படும் குப்பையில் உள்ள இறைச்சி கழிவுகளை சாப்பிட்டு பழகி இருப்பதே இதற்கு காரணம் என்று வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் துணை சபாநாயகர் மருத்துவ சிகிச்சையின் பின்னர் விலங்குகள் சைவ உணவு உண்பவர்களுக்கு 4 முதல் 5 நாட்கள் ஆகும் என்று கூறினார்.
மாடுகளின் பெயரால் மனிதர்களை கொன்று குவிக்கும் காலத்தில் கோமாதாவே அசைவ உணவு பழக்கத்திற்கு மாறி போய் இருப்பது இந்துத்துவவினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.