BJP Hindutva Uttar Pradesh

இந்துத்துவ தலைவர் கமலேஷ் திவாரியை கொலை செய்தவர்கள் யார்?

உத்தரப்பிரதேசம்: வெள்ளிக்கிழமை பிற்பகல் லக்னோவின் நாகா பகுதியில் கமலேஷ் திவாரி (43) எனும் இந்துத்துவ, இந்து சமாஜ் கட்சித் தலைவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,எனினும் தமிழக அளவில் இதை குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியிடப்படவில்லை. கொலை செய்யப்பட்ட கமலேஷ் நபிகள் நாயகம் அவர்களை குறித்து (2015 ஆண்டில்) கீழ்த்தரமாக பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது பட்டிருந்தவர்.

எனினும் யோகி ஆட்சி வந்த பிறகு இவர் மேல் இருந்த வழக்குகள் தளர்த்தப்பட்டு சிறையில் இருந்து வெளியேறினார். போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை அறிவிக்கும் முன்னரே கொலை செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்று வட இந்திய மோடியாக்கள் 24x 7 செய்தியாக்கின. இந்நிலையில் இவரை கொலை செய்தவர்களின் cctv காட்சி வெளியாகியுள்ளது. அதில் காவி உடை அணிந்து கொண்டு 2 ஆண்களும், அவர்களுக்கு பின்னே ஒரு பெண்ணும் தெளிவாக தெரிகின்றனர். எனினும் கமஷை கொலை செய்தவர்கள் முஸ்லிம்கள் என்று பழி சுமத்தப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவரின் தாய் முஸ்லிம்கள் மீது பழி சுமத்த வில்லை மாறாக மகனின் கொலைக்கு பாஜக தலைவர் சிவ்குமார் குப்தா தான் காரணம் என்று பேசும் வீடியோவை ஒரு வட இந்திய மோ(மீ) டியாவும் வெளியிடவில்லை. எனினும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த கொலையை மவ்லானா அன்வாருல் ஹக் மற்றும் முஃப்தி நயீம் கஸ்மி என்பவர்கள் தான் செய்ததாக கொலை நடந்து ஒரு நாளுக்குள்ளாகவே உபி போலீசார் இந்த வழக்கின் குற்றவாளிககளாக அறிவித்துள்ளனர்.

இந்துத்துவ கொள்கை கொண்ட யோகி ஆத்தியநாத் முதல்வர் ஆனது முதல் சிறுபான்மை மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் ஒரு புறம் அரேங்கேறினாலும் இந்துத்துவ தலைவர்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து கொண்டே இருந்தது. இது ஏற்கனவே அவரது அரசுக்கும் இந்துத்துவ வாக்குவங்கிகளிடுத்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கமலேஷ் திவாரி கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு பல மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு வழங்குமாறு பல முறை யோகி அரசாங்கத்திடம் கோரப்பட்டும் ஒரே ஒரு காவலரை மட்டுமே பாதுகாப்புக்கு அமர்த்தியது யோகி அரசாங்கம்.

எனவே தற்போது இந்த கொலை அரசின் பாதுகாப்பு குறைபாட்டின் தோல்வியாக பார்க்கப்பட்டுவதற்கு முன்னரே இந்து முஸ்லிம் பிரச்னை போன்று கொண்டு சென்று முஸ்லிம்கள் மீது பழியை சுமத்துவது தான் பாஜக யோகி அரசின் நோக்கம் என்று நெட்டிசன்களில் ஒரு பகுதியினர் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

File Photo:PTI