Modi Tamil Nadu

மோதி-ஜின்பிங் சந்திப்பு;ஒரு மாதமாக தினம் 16 மணி நேரம் வேலை- 1ரூ கூட கூலி வழங்கவில்லை!

பிரதமர் மோதி சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை முன்னிட்டு மஹாபலிபுரத்தை  தூய்மை படுத்துவதற்காக தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.இவர்கள் கடந்த ஒரு மாத காலமாக  தினமும் சுமார் 16 மணி நேரம் இடைவிடாது பணிபுரிந்து வந்துள்ளனர்.எனினும் இதுவரை தங்களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை என்று துப்புரவு தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிலாளர்களில்  சிலர் மகாத்மா காந்தி கிராமப்புற தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளர்களாக பணி புரிபவர்கள். எனவே மகாபலிபுரம் டவுன் பஞ்சாயத்து அவர்களுக்கு இதற்காக தனியாக பணம் செலுத்துவதற்கு பதிலாக மிகக் குறைந்த எம்.ஜி.என்.ஆர்.ஜி.ஏ வின் கீழ் ஊதியத்தை வழங்கி ஈடுசெய்து விடுவார்களோ என்று இந்த தொழிலாளர்கள் அஞ்சுகிறார்கள்.

Image

நிரந்தர நகர்ப்புற  ஊழியர்களுக்கு வழங்கப்படும்  பருத்தி / பிசின் கையுறைகள், தூரிகை கொண்ட பெரிய விளக்குமாறு போலல்லாமல், தற்போது பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொழிலாளர்களுக்கு குறைந்த தரம் வாய்ந்த பாலிடீன் கையுறைகள் மற்றும் குச்சி விளக்குமாறு வழங்கியுள்ளனர். 

Image
Image

இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர், திரு. ஓம்ஜாஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து எந்த ஒரு  ஊடகமும் செய்தி வெளியிடவில்லை  என்பது  (13-10-2019 1 மணி நிலவரப்படி) குறிப்பிடத்தக்கது.

Image credit:Omjasvin Via Twitter