கடந்த வாரம் கேரளாவின் வலஞ்சேரி அருகே உள்ள அய்யப்பா கோவில் ஒன்றை சேதப்படுத்தி மனித கழிவுகளை வீசியது தொடர்பாக இந்துத்துவ அமைப்புகள் மத உணர்வுகளை தூண்டும் விதமாக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் இங்குள்ள சமூகங்களிடையே மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மனித மலத்தை கோவிலுக்குள் வீசியது கண்டறியப்பட்டது . கைது செய்யப்பட்டவர் வடக்கும்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இரவு 9 மணியளவில் வடக்கும்பூரத்தில் உள்ள ஸ்ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலில் மனித மலத்தை வீசிவிட்டு பின்னர் அவர் அங்கிருந்த ‘சித்ரகூடம்’ மற்றும் பிரம்மராக்ஷர்களின் சிலை ஆகியவற்றை சேதப்படுத்திர உள்ளார் என்று போலீசார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.சைபர் செல் உதவியுடன் குற்றவாளியை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதை குறித்து தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது
மத கலவரத்தை தூண்ட முயற்சித்த ராமகிருஷ்ணன் என்பவர் பாஜகவின் உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பாளர் அயபுன்னியின் தம்பியின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது சகோதரர் ராஜனை விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக என்று தி நியூஸ் மினிட் செய்தி தெரிவித்துள்ளது.
ராமகிருஷ்ணன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 (கலவரத்தை ஏற்படுத்தும் தூண்டுதல் நோக்கத்துடன் செயல்படல் ) மற்றும் 295 A (வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்துதல் ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக டூல் நியூஸ் தெரிவித்துள்ளது.
கோவிலில் மனித மலம் வீசப்பட்டு சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே , இந்துத்துவ அமைப்பான இந்து ஐக்ய வேதி மத கலவரத்தை தூண்டும் விதத்தில் போராட்டத்தை நடத்தி உள்ளது, எனினும் மதவாதிகளுக்கு பதிலடியாக உள்ளூர்வாசிகள் அமைதிக்காக ஒரு அணிவகுப்பை மேற்கொண்டதாகவும் மேற்குறிப்பிட்ட மலையாள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.