இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறியதாக கூறி 43 முஸ்லீம் இளைஞர்கள் (PTI report) மீது உத்தரபிரேதச போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சலாட் கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லையென்றாலும் அறியாமையினால் “உர்ஸ்” திருவிழா கொண்டாடி வருவது வழக்கம்.. இது கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்தாண்டும் கடந்த மாதம் 31ம் தேதி உர்ஸ் திருவிழா கொண்டாடப்பட்டது.
சம்பவம் குறித்து பாஜக ஆதரவாளர் ராஜ்பூத்தின் கூற்று :
“சனிக்கிழமையன்று, சலாத் கிராமத்தில் ஒரு உர்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது, இங்கு பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்களும் பங்கேற்று அதற்கான நன்கொடைகளை கூட வழங்குகிறார்கள். நிகழ்வின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் சைவ உணவு பரிமாறும் ஒரு பெரிய விருந்து நடைபெறுவது வழக்கம். ” என்று அந்த ஊரில் வசிக்கும் பாஜக ஆதரவாளர் ராஜ்பூத் கூறினார்.
.”இந்த ஆண்டு, விருந்து தொடங்கியபோது, பல இந்துக்களுக்கு பாபா கா பிரசாத் [தெய்வத்திற்கு வழங்கப்பட்ட உணவு] என்ற பிரசாதம் வழங்கப்பட்டது,” மக்கள் அரிசியில் இறைச்சி மற்றும் எலும்பு துண்டுகளை கண்டுபிடித்ததாகவும், உடன் உள்ளூர் பஞ்சாயத்து தலையிட்டபோது, முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் எருமை இறைச்சியை தவறுதலாக பரிமாறியதாக ஒப்புக்கொண்டதாகவும் ராஜ்பூத் கூறினார்.
மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கோரியதாகவும், நடந்த தவறுக்கு பொறுப்பேற்று ‘சுத்திகரிப்பு சடங்கிற்கு’ (!) ரூ .50 ஆயிரம் வழங்க முன்வந்ததாகவும் ராஜ்பூத் தெரிவித்தார். எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர் “தெரிந்தே” உணவில் இறைச்சியை “எங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காக” சேர்த்துள்ளதாக , அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய கிராமத்திற்குச் சென்றுள்ளார் ராஜ்பூத். இது தான் சம்பவம் குறித்தான ராஜ்பூத் என்பவரின் கூற்று..
பொய் வழக்கு பதிவு !
எனினும் புகார் தாரரில் ஒருவரான ராஜ்குமார் , பப்பு அன்சாரி என்ற ஒரு நபர் மட்டுமே அரிசியை இறைச்சியுடன் பரிமாறியமைக்கான குற்றவாளி என்றும், மேலும் 22 பேர் நிரபராதிகள் என்றும் கூறினார். ராஜ்பூத்தின் வற்புறுத்தலின் பேரில் தான் மற்றவர்களின் பெயர்கள் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
முக்கிய குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்சாரி தனது மருமகன் நோயிலிருந்து குணமடைந்தால் “பிரியாணி விருந்து” அளிப்பதாக நேர்ச்சை செய்து அங்குள்ள மக்களுக்கும் வாக்களித்து இருந்தார் என்று சர்காரி காவல் துறை அதிகாரி அனூப் குமார் பாண்டே தெரிவித்தார். விழாவில் ஒரு பகுதியினருக்கு காய்கறிகளுடன் பூரி வழங்கப்பட்டது, மற்றொரு பகுதியில் பிரியாணி வழங்கப்பட்டது என்று மேலும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாண்டே கூறுகையில் ” விருந்தின் போது திடீரென .. பிரியாணியில் எருமை இறைச்சி கலந்துள்ளதாக வதந்திகள் பரவியது .நான் அங்கு சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தேன்.” அதன்பிறகு பாஜக எம்.எல்.ஏ மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட்டார், அதைத் தொடர்ந்து “மதத்தின் அடிப்படையில் இரு பிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல்” போன்ற சட்ட பிரிவுகளின் கீழ் 43 முஸ்லீம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
புகார் அளித்தவர் வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்துள்ளார். ஆனால் உள்ளூர் பாஜக எம்எல்ஏ பிரிஜ்பூஷன் ராஜ்பூத் புகார் அளிக்குமாறு வற்புறுத்தி உள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு சுவாமி நாத் பி.டி.ஐ யிடம் இறைச்சி பிரியாணி வழங்கப்பட்டது என்பது உண்மை இல்லை. “இந்த விஷயத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, ”என்று அவர் தெரிவித்தார்.
நிலைமை இப்படி இருக்க முஸ்லிம்கள் விஷயத்தில் வன்மத்தை பரப்பும் விதத்தில் அரைகுறையாக பொய்யான ஆக்கம் வெளியிட்டுள்ளது தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் .இதே இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலத்தில் ஒழுங்காக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதனை ” சாதத்தை” (அந்த ஆக்கத்தில் உள்ள வார்த்தை) உண்ணும் ஒருவர் மொழி பெயர்த்தமையால் வெறுப்பை கக்கியுள்ளார்.