© Reuters -Photo for representation.
இந்திய பொருளாதார நிலை அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்ற மக்கள்,எதிர் கட்சியினர் பரவலாக விமர்சித்து வரும் வேலையில் மோடி அரசாங்கம், ரஷ்யாவின் ‘ஃபார் ஈஸ்ட்’ (தூர கிழக்கு) பகுதிகளுக்கான வளர்ச்சிக்காக 1 பில்லியன் டாலர் 72,411,296,162 கோடி ருபாய் நிதியுதவி (லைன் ஆஃப் கிரெடிட்) அளிக்க முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி, இன்று ரஷ்யாவில் வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள விலாடிவோஸ்டாக்கில் நடந்த 5வது கிழக்கு பொருளாதார ஃபோரமில் உரையாற்றிய மோடி, இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “எனது தலைமையிலான அரசாங்கம், கிழக்கு ஆசியாவில் இருக்கும் தேசங்களுடன் ‘ஆக்ட் ஈஸ்ட்’ என்கிற கொள்கையின் கீழ் தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று மோடி கூறினார்.
இதன் மூலம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பிணைப்பை மேலும் ஆழமாக்குவோம்.வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் சாதனைகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. குறிப்பாக ரஷ்யயாவின் தூர கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்காக இங்கு வாழும் இந்தியர்கள் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு தீவிர பங்களிப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன், “என்று மோடி கூறினார்.