Gaumata Intellectual Politicians

‘கிருஷ்ணர் பாணியில்’ புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் கூடுதல் பால் வழங்கும் – பாஜக எம்.எல்.ஏ கருத்து!

இந்துக்கள் தெய்வமாக கருதும் ‘கிருஷ்ணர் இசைக்கும் ஸ்ருதியில்’ புல்லாங்குழலை வாசித்தால், மாடுகள் பால் தருவது பல மடங்கு அதிகரிக்கிறது என்பது நவீன விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது(!) என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ திலீப் குமார் பால் கூறி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

கடந்த ஞாயிறு (25-8-19) அன்று சில்சார் எனும் பகுதியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் தான் அவர் மேற்குறிப்பிட்ட விஞ்ஞான பாடம் எடுத்துள்ளார்.

இதற்கு என்ன ஆதாரம் ? என்று அவரிடம் கேட்கப்பட.. குஜராத்தில் (NGO) ஆய்வு ஒன்று நடந்தது அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பதிலாக கூறினார். எனினும் இதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை.

https://twitter.com/ashoswai/status/1166276934826958849

பாஜக எம்.எல்.ஏ கூறியதை போன்று ஏதேனும் ஆய்வு நடந்துள்ளதா? என்று நாம் தேடி பார்த்தவகையில் அப்படி எந்த ஒரு ஆய்வும் கிடைக்கப்பெறவில்லை. எனினும் கிருஷ்ணர் புல்லாங்குழலை வாசிப்பதை விஞ்ஞானிகள் கண்டு , கிருஷ்ணரின் ஒத்துழைப்போடு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள இவரின் கருத்தை எப்படி விளங்கி கொள்வது என்று புரியவில்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜக எம்.எல்.ஏ கருத்தில் உண்மை உள்ளதா ?

இவர் கூறியுள்ள கருத்தான புல்லாங்குழலை வாசித்தால், மாடுகள் பன்மடங்கு அதிக அளவில் பால் சுரக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆய்வும் நடைபெற்றதாக தெரியவில்லை. எனினும் மாடுகள் (soft music ) மெல்லிய வகை இசைக்கு உட்படுத்தப்படும் போது சற்று கூடுதலாக பால் சுரக்கிறது என்று கடந்த 2001 ஆண்டு காலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம் போதை போலான இசையின் காரணத்தால் மாடுகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைகிறது .. பால் சுரப்பதற்கு தேவையான “ஆக்சிடோசின்” என்ற அமிலம் சுரப்பது எளிமை அடைகிறது.அதனால் பால் சற்று கூடுதலாக சுரக்கிறது என்று கண்டறியப்பட்டது. ஆனால் (hard music ) ராக் மியூசிக் வகைறாக்களை பயன்படுத்தி ஆய்வு செய்ததில் இவ்வாறு கூடுதல் பால் சுரப்பதில்லை என்றும் கண்டறிந்தனர். எனினும் இது புல்லாங்குழலை பயன்படுத்தி செய்யப்பட்ட ஆய்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமைச்சர் கூறுகையில் ”நான் விஞ்ஞானி அல்ல. ஆனால் இந்திய கலாசாரத்தில் உள்ள வாஸ்து அறிவியலை (!) நான் படித்தவரை அவை தற்போது நிஜமாகி வருகிறது. விஞ்ஞானிகளும் இதனை நம்பத்தொடங்கியுள்ளனர்” என்று கூறினார். ஆனால் இவர் கூறியுள்ளது போல விஞ்ஞானிகள் வாஸ்துவை ஒரு விஞ்ஞானமாக பார்ப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க :மாடுகள் ஆக்சிஜனை மூச்சு விடும் போது வெளியிடுகிறது : பாஜக எம்.எல் .ஏ கருத்து