பாலத்தின் இரு புறத்திலும் சி.ஆர்.பி.எஃ ப் படையினரால் துரத்தப்பட்டதில் நதியில் குதித்து மரணமடைந்த 17 வயது காஷ்மீர் சிறுவன்.
கடந்த திங்களன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மக்களவையில் அறிவித்தார்.
அறிவிப்பதற்கு முன்பாகவே கஷ்மீரில் 144 தடை உத்தரவு, மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். மக்கள் பெரும் அச்சத்திலும் மூழ்கியிருந்தனர். இந்த நாளில் தான் 17 வயது சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அமித்ஷா அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், ஏனைய இந்தியர் களைப் போன்று காஷ்மீர் மக்களுக்கும் இது குறித்த தகவல் சிறிதும் தெரிந்திருக்கவில்லை. ஒசைப் அல்தாஃப் தன் ஒரு சில நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மத்திய சேமக் காவல் படை (CRPF) அவர்களை துரத்தி உள்ளது. இதனை கண்டு அச்சமுற்ற அந்த சிறுவர்கள் பயத்தினால் கண்மூடித்தனமாக ஓடி உள்ளனர். அவர்களை விடாது துரத்தி சென்ற ஆயுதப்படையினர் இறுதியில் ஒரு நதியின் மேல் உள்ள குறுகிய நடைபாதை பாலத்தை அடைந்தனர்.
பாலத்தின் நடுவில் சிக்கி கொண்ட சிறுவர்கள் :
பாலத்தின் எதிர், எதிர் புறத்தில் இருந்து ஓடி வந்த வாலிபர்கள் இனி எந்த திசையிலும் ஓட முடியாது என்று உணர்ந்து, அச்சத்தில் நதியில் குதித்து விட்டனர். அங்கிருந்த ஆற்றில் மணலைப் பிரித்தெடுக்கும் தொழிலாளர்களின் விரைவாக செயல்பட்டதாள் மற்ற சிறுவர்கள் காப்பாற்றப்பட்டாலும், ஒசைபை காப்பாற்ற முடியவில்லை. அவருக்கு நீச்சல் தெரியாது. அவர் 20 நிமிடங்கள் நதியில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார் ., ”என்று அல்தாப்பின் தந்தை முஹமது அல்தாஃப் மராஸி தெரிவித்தார்.
சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் (எஸ்.எம்.எச்.எஸ்) மருத்துவமனைக்கு ஹஃப் போஸ்ட் இந்தியா ஊடகம் சென்றது.அங்கு கூடுதலாக 13 நோயாளிகளை காண முடிந்ததாகவும், அவர்கள் அனைவரும் பெல்லெட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்கள். குறிப்பாக கண்களில் பெல்லெட் குண்டுகள் தாக்கப்பட்டுருந்த நிலையில் சிலரை காண முடிந்தது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீடியாவிற்கு தகவல் பகிர தெரிவிக்க தடை :
அரசு மற்றும் ராணுவ/போலிஸ் படைகள் சம்பந்தப்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து ஊடகங்களுடன் பேச எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மருத்துவமனை பொறுப்பாளர்கள் கூறினர்.
“இது எங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் நாங்கள் உங்களுடன் எந்த தகவல்களையும் பகிர முடியாது” என்று மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் ஹஃப் போஸ்ட் இந்தியாவிடம் (தன் பெயரை மறைக்க கேட்டுக்கொண்டபடி ) கூறினார். மேலும் “ஊடகங்களுக்கு எந்த தகவலையும் கொடுக்க வேண்டாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.