1976 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை பாக்கிஸ்தான் முற்றிலுமாக நிறுத்தி உள்ளது – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேய்க் ரஷீத் அறிவிப்பு
இந்திய அரசு காஷ்மீர் மக்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஜனநாயக விரோதமாக நீக்கிவிட்டதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவுடனான வர்த்தக முறிவு அறிவிப்பை வெளியிட்டது. அதற்க்கு அடுத்தபடியாக புதன்கிழமையன்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரான ஷேய்க் ரஷீத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் “ஷிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி வரும் லாஹூர் -தில்லி மத்தியிலான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சேவையை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஷீத் கூறுகையில் நான் ரயில்வே அமைச்சராக இருக்கும் காலம் வரை ஒரு போதும் மீண்டும் சேவை தொடங்கப்படாது என்று அறிவித்துள்ளார்.
இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து(2:14pm ) சம்ஜோதா எக்ஸ்பிரஸ் பாகிஸ்தானின் வாகா எல்லையில் நிறுத்த பட்டது, இது பயணிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்து பயணிகளின் தேவைக்காக இந்தியா அரசு மாற்று ஏற்பாடு செய்துள்ளதாகவும்,ரயில் விரைவில் இந்திய எல்லையான அட்டாரியை வந்தடையும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.