வியாழக்கிழமை(25-7-19) ஜார்கண்டில் பாஜக அமைச்சர் சிபி . சிங் காங்கிரஸைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினரை மாநில சட்டசபைக்கு வெளியே “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடுமாறு கட்டாய படுத்தினார். இந்த சம்பவம் வீடியோவில் பிடிபட்டதை அடுத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பாஜக அமைச்சரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான இர்பான் அழுத்தமாக பிடித்த நிலையில் ,”இர்பான் பாய், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சத்தமாக சொல்லுங்கள்” என்று சிபி சிங் வீடியோவில் கட்டாயப்படுத்துவதை காணலாம். பின்னர் அவர் “உங்கள் முன்னோர்கள் ராம்-வம்சத்தவர்கள் தான் பாபர்-வம்சத்தவர் அல்ல” என்று கூறுகிறார்.
இதற்கு பதிலடி தரும் அன்சாரி, “நீங்கள் மிரட்டுவதற்கு தான் ராமரின் பெயரைப் பயன்படுத்துகிறீர்கள் … உண்மையில் நீங்கள் ராமரின் பெயரை இழிவுபடுத்துகிறீர்கள்.மக்களுக்கு இப்போதைய தேவையெல்லாம் வேலை வாய்ப்புகள் , மின்சாரம், குடிநீர் , நல்ல வடிகால் திட்டம் ” என்று கூறுகிறார்.
“உங்களைப் பயமுறுத்துவதற்காக நான் இதைச் சொல்லவில்லை. உங்கள் மூதாதையர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷமிட்டார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் … தைமூர், பாபர், கஸ்னி உங்கள் மூதாதையர்கள் அல்ல. மாறாக உங்கள் மூதாதையர்கள் ஸ்ரீ ராமை பின்பற்றுபவர்கள் தான் ” என்று பாஜக சிங் கூறுகிறார்.
சிபி சிங் ஜார்க்கண்டின் பாஜக அரசில் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து அமைச்சராக உள்ளார். ஜம்தாராவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இர்பான் அன்சாரி. இந்த சம்பவம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாக மாநில பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
அப்பாவி முஸ்லிம் மக்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு கட்டாயப்படுத்தி தாக்க படுவதும், கொலை செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவருக்கே இவ்வாறான நிகழ்வு நடப்பது நம் நாட்டின் தற்போதய நிலையை படம் பிடித்து காட்டுகிறது.
சமீபத்தில் தான் “ஜெய் ஸ்ரீராம் என்பது போர்க்கால அழுகையாக மாறிவிட்டது” : கும்பல் வன்முறைகளுக்கு எதிராக மணிரத்னம் உட்பட 49 திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.