உபி மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தார் தாக்கப்படும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில் கடந்த திங்களன்று உபி மாநில தலைநகரான லக்னோவில் ,ஒரு கிறிஸ்துவ குடும்பத்தார் தங்கள் அண்டை வீட்டினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது . தாக்கியவர்கள் “தாகூர்” சமூகத்தை சேர்ந்தவர்கள்.
நந்தி விஹார் எனும் பகுதியில் வாழும் இந்த கிறிஸ்தவ தம்பதியினர் நீண்ட காலமாக பெரும்பான்மை சமூகமான “தாகூர்” சமூகத்தினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆட்படுத்த படுவதாக கூறினர்.
இதற்கு காரணம் கிறிஸ்துவ தம்பதிகள் அப்பகுதியில் சிறுபான்மை சமூகமாக தனித்து வசித்து வருகின்றனர். கடந்த திங்களன்று கிறிஸ்தவ தம்பதியினரின் குழந்தைக ளுக்கும் தாகூர் சமூக சமூகத்தினரின் குழந்தைகளுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு ‘கூச்சல் சண்டையை’ சாக்காக வைத்து கிறிஸ்தவ தம்பதியினரை தாக்கூர் சமூகத்தினர் தாக்கியுள்ளனர் என்று அந்த தம்பதியினர் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இப்பகுதியில் நீங்கள் வசிக்கக் கூடாது என்று மிரட்டியும் தகாத வார்த்தைளால் காயப்படுத்தியும் உள்ளனர் என்றார் தாக்கப்பட்ட பெண்மணி.
மேலும் அவர் கூறுகையில் தனக்கும் தன் குடும்பத்திரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுவதாக தெரிவித்தார்.
காவல்துறையினர் இரு தரப்பிலிருந்தும் வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுபாம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது 307 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கோமதி நகரின் வட்ட அலுவலர் அவிஷ்வர் சந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
தாகூர் சமூகம் பாஜகவின் மிகப்பெரிய ஒரு வாக்கு வங்கியாக கருதப்படுகிறது. பிஹார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையாக ஜெயித்ததற்கு இந்த சமூகத்தினரின் ஓட்டு மிக பெரிய பங்காற்றியுள்ளது குறிப்பிட தக்கது.