Corruption Islamophobia Uttar Pradesh

ரூ.128 கோடி மின் ரசீது! ஷமீம் வீட்டில் இருப்பதோ ஒரு ஃபேன் லைட் மட்டுமே !

உபி  மாநில ஹபூர் மாவட்டம், சாம்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷமிம்(வயது80). இவர் தன் மனைவி கைரு நிஷாவுடன் வசித்து வருகிறார்.ஷமிம் ஒரு கூலி தொழிலாளி. இவரின் சிறிய வீட்டில் 1 சிறிய டிவி , 1 மின்விசிறி, 2 டியூப் லைட்டுகளும் மட்டுமே இருக்கிறது.மாதந்தோறும் ரூ.700க்கு மேல் மின்கட்டணத்தை ஷமிம் செலுத்தியதில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் மின்கட்டணமாக ஷமிமுக்கு மாவட்ட மின்வாரியத்தில் இருந்து வந்த  நோட்டீஸைப் பார்த்த ஷமிம் அதிர்ச்சி அடைந்தார். ஷமிம் 2 கிலோவாட் (kw ) மின்சாரம் மட்டுமே பயன்படுத்தியதற்காக ரூ.128 கோடியே 45 லட்சத்து 95 ஆயிரத்து 444 மின் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனிதநேயமற்ற அதிகாரிகள்:

இதைக் கண்டு ஷமிம் அதிர்ச்சி அடைந்து மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். தவறுதலாக தனக்கு ரூ.128 கோடி மின்கட்டணம் வந்துள்ளது. எனவே திருத்திக்கொடுங்கள் என்று ஷமிம் அதிகாரிகளிடம் பல முறை கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால், ஷமிமின் வேண்டுகோளை அதிகாரிகள் நிராகரித்தது மட்டுமின்றி , மின் கட்டண ரசீதில் எந்த குளறுபடியும் இல்லை, கட்டணத்தை செலுத்தாவிட்டால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என்று எச்சரித்துள்ளனர். இதனால், முதியவர் ஷமிம் வேதனையில் ஆழ்ந்துள்ளார்.

மனதில் ஈரமில்லாத மனிதர்கள் மட்டுமே இவ்வாறு ஏழைகளை உதாசீன படுத்த முடியும். மேலும் இவர் முஸ்லிமாகவும் இருப்பதால் உ.பி மாநிலத்தில் பரவிவரும் இஸ்லாமோபோபியாவும் இதற்கு காரணம் என்று சமுக வலைத்தளங்களில் கருத்திட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் முதியவர் ஷமிம் கூறுகையில், ” நானும் எனது மனைவி மட்டுமே வீட்டில் வசிக்கிறோம். வீட்டில் மின்விளக்கு, மின்விசிறி, சிறிய டிவி  தவிர வேறு ஏதும் இல்லை. அதிகபட்சமாக 700 ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வராது. ஆனால், கடந்த மாதம் ரூ.128 கோடி மின்கட்டணம் செலுத்தக் கூறியுள்ளார்கள்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று கூறி, அதிகாரிகளிடம் முறையிட்டபோது, என்னுடைய கோரிக்கையை யாரும் காது கொடுத்து கேட்காமல் அலட்சியம் செய்தனர். மேலும் கட்டணத்தை செலுத்துமாறு கூறிவிட்டனர். இவ்வளவு பெரிய தொகையை எப்படி செலுத்துவது?. யாரிடம் இதற்கு மேல் முறையிடுவது எனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால், மின்இணைப்பையும்  துண்டித்துவிட்டனர். ஹபூர் நகரம் முழுவதும் செலுத்த வேண்டிய மின் கட்டணம் முழுவதையும் நான் செலுத்துவது இயலாத காரியம் ” என அந்த அப்பாவி மனிதர் தெரிவித்தார்.

மீடியாவில் செய்தி கசிந்த பின்பு :

இதுகுறித்து லக்னோ மின்வாரியஅதிகாரிகளிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர்கள் இந்த விவகாரம் இப்போதுதான் தங்களுக்கு தெரியவந்தது(?) என்றும், தொழில்நுட்ப கோளாறுகள் ஏதேனும் நடந்திருந்தால்(?!) விரைவில் சரிசெய்யப்பட்டு முறையான மின் கட்டண ரசீது அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்கள்.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷமிம், ” எங்களது வேண்டுகோளை செவிகொடுத்து கேட்க யாரும் இல்லை. அவ்வளவு பெரிய தொகையை என்னால் எப்படி செலுத்த முடியும். நான் இதுதொடர்பாக புகார் அளிக்கச் சென்ற போது, மின் கட்டணத்தைச் செலுத்தினால்தான் மின்சாரம் வழங்குவோம் எனக் கூறி, மின் இணைப்பைத் துண்டித்து விட்டனர்.

ஹப்பூர் நகரத்துக்கான மொத்த மின்கட்டணத்தையும் நான் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள். என் வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் என்னால் இந்தத் தொகையை செலுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

உபி முதல்வர் யோகி அரசாங்கத்தில் முஸ்லிம்கள் பரவலாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறு நிகழ்ந்துள்ளது கவலைக்குரிய விஷயமாகும். பலர் இந்த சம்பவத்தை நகைச்சுவையாக கடந்து செல்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி சிந்திக்க வேண்டிய காட்டாயம் உள்ளது.

மீடியாவின் தலையீட்டால் மட்டுமே தவறை ஒப்பு கொண்ட மின்வாரியம்:

முதியவர் பல நாட்களாக பல்வேறு முறை மின்வாரிய அதிகாரிகளை அணுகியும் ஏளனப்படுத்தப்பட்ட நிலையில் அவரின் கோரிக்கை. நிராகரிக்கப்பட்ட வந்ததையடுத்து.அவர் மீடியா விற்கு செய்தி தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு விஷயம் பெரிதாகவே ,இதுதொடர்பாக துணை மின் பொறியாளர் ராம் சரண் ANI செய்திநிருவனத்திடம் கூறுகையில்; “இது தொழில்நுட்பப் பிழையாக இருக்க வேண்டும். அவர்கள் மின் கட்டண ரசீதைக் கொடுத்தால், கணினியில் உள்ள தொழில்நுட்பப் பிழைகளைச் சரிசெய்து, புதிய ரசீதை வழங்குவோம். இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தொழில்நுட்பத் தவறுகள் நடப்பது இயல்புதான் என்றார்.”

  ஊடங்கங்கள் சுட்டிக்காட்டாத விஷயம்..

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் முதியவர் இத்தனை  நாட்களாக கடும் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.சம்பத்தப்பட்ட அதிகாரி ஒரு குறைந்தபட்ச மன்னிப்பு கூட கேட்கவில்லை.மேலும் மின்வாரியத்தின் தவராக இருப்பதால்  நாங்களே அவரை சந்தித்து இதை சரி செய்வோம் என்றும் கூறாமல், “அவர் வந்தால், ரசீதை காட்டினாள்” என்ற பேச்சே ஆணவத்தின் வெளிப்பாடாகும்.

இது உபி மாநிலமாக வேறு இருப்பதால் இன்னும் எத்தனை நாட்கள் ஷமீம் குடும்பம் இருட்டில் இருக்க நேரிடுமோ !

பணக்காரன்,ஏழை, ஜாதி மதம் போன்ற எதையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவையாற்றும் காலம் கனவிலும் வராது போலிருக்கு !