Corona Virus Kumbh Mela Rajasthan

கும்ப மேளாவில் பங்கெடுத்த 19 கோவிட் பாசிடிவ் நோயாளிகள் உத்தரகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் ..

புதுடில்லி: ஹரித்வாரில் கும்பமேளாவுக்குச் சென்று தெஹ்ரி மருத்துவமனையில் குணமடைந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பத்தொன்பது கோவிட் பாசிட்டிவ் நோயாளிகள் தப்பி ஓடிவிட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரகண்ட் மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பீதியைத் ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, ராஜஸ்தான் மாநில அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்தி உள்ளது. “தப்பி ஓடியவர்கள் கும்ப மேளாவில் பங்கெடுத்தவர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது,” என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் 19 நோயாளிகளுக்கும் எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உள்ளோம், அவர்களை பற்றிய தகவல்கள் அவர்களின் சொந்த மாநிலத்துடனும் பகிரப்பட்டுள்ளன” என்று தெஹ்ரி மாவட்ட மாஜிஸ்திரேட் இவா ஸ்ரீவஸ்தவா கூறினார்.

நரேந்திர நகரில் உள்ள 200 படுக்கைகள் கொண்ட ஸ்ரீதேவ் சுமன் அரசு மருத்துவமனையில் 30 கோவிட் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காணாமல் போன 19 பேர் அந்தக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

https://twitter.com/imMAK02/status/1383684299614941190

“உணவுப் பொதிகளை விநியோகிக்க ஊழியர் சென்றபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. 30 பொட்டலங்கள் கேட்கப்பட்டிருக்க, 11 பொட்டலங்கள் மட்டுமே நோயாளிகளால் எடுக்கபட்டது . 19 பொட்டலங்கள் எடுக்கப்படாமல் அபப்டியே இருந்துள்ளது. பின்னர் மருத்துவமனை இது குறித்து காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தது . பல நோயாளிகள் வெளியே செல்வதை மருத்துவமனையின் பாதுகாப்புப் பணியாளர்கள் எவ்வாறு கவனிக்கத் தவறிவிட்டார்கள் என்பதுதான் இங்கு கேள்வி.” என்று சுகாதாரத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தப்லீக் ஜமாத்தினர் திட்டமிட்டு கொரோனா பரப்பியதாகவும் மருத்துவமனையில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தப்பி ஓடியதாகவும், கொரோனா ஜிஹாத் என்றும் பொய் செய்தி பரப்பி கொண்டிருந்தவர்கள் இந்த உண்மை செய்தியை பரப்புவர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.