12 ஆண்டுகளாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி அங்கு அவரது ஆட்சி காலத்தில் துவங்கிய அரசு மருத்துவ கல்லூரிகள் எத்தனை தெரியுமா? – ஒன்றும் கூட இல்லை.
குஜராத்தில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகள் மொத்தம் ஆறுதான்.
சில வலைத்தளங்கள் 31 என்று காண்பிக்கும். உண்மை என்னவென்றால் மீதமிருக்கும் கல்லூரிகளில் அரசு நிர்வாகம் மட்டுமே இருக்கும். அரசு நிதி ஒதுக்காது. அவை சுயநிதி கல்லூரிகள் போல இயங்கும்.
எடுத்துக்காட்டாக AMCMET மருத்துவக்கல்லூரியை துவங்கியது அகமதாபாத் மாநகராட்சியின் ட்ரஸ்ட். ஆனால் அங்கு செமஸ்டர் கட்டணம் ரூ. 3,65,500/-. தவிர மேனேஜ்மென்ட் கோட்டாவும் இருக்கும்.
அந்த 6 அரசு மருத்துவ கல்லூரிகளும் துவங்கப்பட்ட ஆண்டுகள்
பி. ஜே. மருத்துவக் கல்லூரி, அகமதாபாத் – 1946
அரசு மருத்துவக் கல்லூரி, பரோடா – 1949
எம். பி. ஷா மருத்துவக் கல்லூரி, ஜாம்நகர் – 1954
அரசு மருத்துவக் கல்லூரி, சூரத் – 1964
பி. டி. யு. மருத்துவக் கல்லூரி, ராஜ்கோட் – 1995
அரசு மருத்துவக் கல்லூரி, பாவ்நகர் – 1995
இந்த 6 மருத்துவ கல்லூரிகளில் மட்டும்தான் கல்விக்கட்டணம் 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை இருக்கும். மீதமுள்ள கல்லூரிகளில் குறைந்தது 3 இலட்சம்.
ஒரு ஒப்பீட்டுக்கு, தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 26. அங்கு ஆண்டு கல்வி கட்டணம் 13 ஆயிரம்!
இதுவே உண்மை நிலவரம். குஜராத் மாடல்.
நன்றி : தகவல் ட்விட்டர் பயன்பாட்டாளர் பூதம்